For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடலில் மூழ்கி பலியான மாணவர்கள் குடும்பத்திற்கு ஒரு லட்சம் நிதி உதவி!

Google Oneindia Tamil News

கடலில் மூழ்கி பலியான மாணவர்கள் குடும்பத்திற்கு ஒரு லட்சம் நிதி உதவியை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார் !

மதுரை: கடலில் மூழ்கி பலியான மதுரையைச் சேர்ந்த 4 பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ ஒரு லட்சம் வழங்கப்பட்டது.

Minister gives solatium to drowned students

மதுரை திருநகரைச் சேர்ந்த சி.எஸ்.ராமாச்சாரியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியைச் சேர்ந்த செல்வன் பி.தேவ்ஆனந்த் , ஆர்.விஷ்ணுதரன், எம்.சதீஷ்குமார், எஸ்.பரமேஸ்வரன், ஆகிய நான்கு மாணவர்கள் கடந்த ஜூலை 12 ம் தேதி அன்று தூத்துக்குடி துறைமுக கடல் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்த தகவல் அறிந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்தார். மேலும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.

இதனையடுத்து, கடலில் மூழ்கி பலியான 4 பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் காசோயை , கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் போது, எம்.ஏல்.ஏ. முத்துராமலிங்கம், மாவட்ட ஊராட்சித் தலைவர் தர்மராஜா , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீனிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

English summary
Minister Sellur Raju gave away the Rs 1 lakh solatium to the drowned students in Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X