மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விரைவில் அதிமுகவிற்கு பெண் தலைமை வரும்.. அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பேச்சு!

Google Oneindia Tamil News

மதுரை: விரைவில் அதிமுகவிற்கு பெண்களின் தலைமை வரும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில், அ.தி.மு.க. மகளிர் பிரிவு பெண்களுக்கான சைக்கிள் பேரணி பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு காரணம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான். 'குழந்தைகளுக்கு தாயின் இன்ஷியலையும், பயன்படுத்தலாம் என புரட்சி செய்தவர் ஜெயலலிதா.

[சென்னை, கோவையில் மின்சார பஸ்கள் அறிமுகம்.. அமைச்சர் வேலுமணி தகவல்]

சாதிக்கும் காலம்

சாதிக்கும் காலம்

இது போன்று மகளிருக்காக பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியவர் ஜெயலலிதா.
எதிர்காலத்தில் நிச்சயமாக பெண்கள் சாதிக்கும் காலம் வரும். இயக்கத்தை வழிநடத்த பெண்கள் வருவார்கள்.

எதிர்காலத்தில் வாய்ப்பு

எதிர்காலத்தில் வாய்ப்பு

விரைவில் அதிமுகவிற்கு பெண்களின் தலைமை வரும். பெண்களும் ஆண்களை போன்று தேர்தல் காலத்தில் இணைந்து செயல்படுவதால் எதிர்காலத்தில் அதிமுகவின் இயக்கத்தில் வாய்ப்பு இருக்கும்.

அதிமுக மட்டும்தான்

அதிமுக மட்டும்தான்

28 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் கட்சி என்றால் அது அதிமுக மட்டும்தான். இந்த அரசு மக்களுக்கான அரசு, அவர்கள் நினைத்ததால்தான் நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம். இவ்வாறு பேசினார் அமைச்சர் செல்லூர் ராஜூ.

உற்சாகப்படுத்தவே..

உற்சாகப்படுத்தவே..

அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கூட்டத்தில் அதிக மகளிர் பங்கேற்றதால் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவ்வாறு பேசினேன். வேறு எந்த காரணமும் இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

English summary
Minister Sellur Raju has said A woman will lead ADMK party in future. Sellur Raju said this ADMK Meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X