For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அடக் கிராதகர்களா.. ஆப்பிள் ஐபோன் கேட்டா ஆப்பிள் பழத்தைப் போய் அனுப்பிருக்கீங்களே..!

Google Oneindia Tamil News

மெல்போர்ன்: ஆன்லைனில், ஆப்பிள் ஐபோன் கேட்ட பெண்ணிற்கு இரண்டு ஒரிஜினல் ஆப்பிள்களைக் கொடுத்து ஏமாற்றியுள்ளார் பெண்ணொருவர்.

ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். கரணம் தப்பினால் மரணம் என்ற கதை தான். கொஞ்சம் அசந்தால் போலிகளை நம் தலையில் கட்டி விடும் ஏமாற்றுக்காரர்கள் அதிகம்.

கண்களால் நேரடியாகப் பார்த்து, விசாரித்து, பரிசோதித்து பொருட்களை வாங்குவது தான் எப்போதுமே நல்லது என்பதற்கு இச்சம்பவமே நல்லதொரு உதாரணம்.

ஐபோன் வாங்க ஆசை...

ஐபோன் வாங்க ஆசை...

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் வசித்து வருபவர் 21 வயது இளம்பெண் ஒருவர் ஐபோன் வாங்க ஆசைப்பட்டு, ‘தனக்கு 2 ஆப்பிள் ரக நவீன கைபேசிகள் தேவை என 'ஆன் லைன்' மூலம் விளம்பரம் செய்துள்ளார்.

காஸ்ட்லி ஆப்பிள்...

காஸ்ட்லி ஆப்பிள்...

அவர் அளித்த விளம்பரத்திற்கு பதில் சில தினங்களிலேயே வந்தது. அதில் ஒரு பெண் தன்னிடம் அவர் எதிர்பார்த்தது போன்ற இரு ஆப்பிள்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இரு ஆப்பிள் 73000 ரூபாயா...?

இரு ஆப்பிள் 73000 ரூபாயா...?

அவரின் பேச்சில் மயங்கிய இளம்பெண், போனை வாங்கிக் கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். இருவரும் குறிப்பிட்ட நாளில் ஒரு உணவகத்தில் சந்தித்தனர். அழகிய பார்சலை ரூ 73000 கொடுத்து பெற்றுக் கொண்ட அப்பெண், மகிழ்ச்சியோடு வீடு திரும்பியுள்ளார்.

ஆப்பிள்ல எங்க சிம் போடறது...

ஆப்பிள்ல எங்க சிம் போடறது...

ஆசையாக சிம் போடு பேசலாம் என பார்சலைத் திறந்தவருக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. காரணம் உள்ளே, பளபளப்பாக அழகிய இரண்டு ‘நிஜ' ஆப்பிள்கள் இருந்தன.

போலீசில் புகார்...

போலீசில் புகார்...

பின்னர் தான் அந்த இளம் பெண்ணிற்கு தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தது. உடனடியாக தான் ஏமாற்றப்பட்டது குறித்து போலீசில் புகார் செய்துள்ளார் அவர். குற்றவாளியைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

விழிப்புணர்வு தேவை...

விழிப்புணர்வு தேவை...

‘ஆன் லைனில் பொருட்களை வாங்குபவர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்' என குற்ற தடுப்பு காவலர் ஜெஸ் ஹாப்கின் என்பவர் பொதுமக்களை எச்சரித்துள்ளார்.

நேர்மை... கடமை.. பொறுமை...

நேர்மை... கடமை.. பொறுமை...

ஏமாறுறவங்க இருக்கற வர ஏமாத்துறவங்க இருக்கத்தானச் செய்வாங்க... ஆரம்பத்துல இருந்தே அந்த ஏமாற்றுப் பெண் ‘ஆப்பிள்' இருக்குனு தான சொல்லியிருக்காங்க... ரொம்ப நேர்மையா

English summary
A 21-year-old Australian woman who was trying to buy Apple smartphones online was conned into paying $1,200 for two edible apples!
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X