For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆதிதிராவிட கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க பிரதமருக்கு ஜெ. கோரிக்கை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஆதிதிராவிட கிறிஸ்தவ மக்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "ஆதி திராவிட கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டடோர், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வலியுறுத்தி கடந்த 1995ஆம் ஆண்டே உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதே கோரிக்கையை தான் தற்போதும் வலியுறுத்துகிறேன்.

தமிழகத்தில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது எஸ்.சி பிரிவில் இந்து, சிக்கிம், புத்த சமயத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பயன்பெற்று வருகின்றனர். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் சேர்க்கப்படவில்லை. எனவே, ஆதி திராவிட கிறிஸ்தவர்களையும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

இது குறித்த மசோதா தற்போது நடந்து வரும் மழைக்காலக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்பட வேண்டும். இதன் மூலம், தமிழகத்தில் உள்ள ஆதி திராவிட கிறிஸ்தவர்கள், எஸ்.சி. பிரிவினருக்கு தமிழக அரசு அளிக்கும் பல்வேறு நலத்திட்டங்களைப் பெற முடியும். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் ஜெயலலிதா அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

English summary
Chief Minister Jayalalitha has urged the PM to add dalit christians in the SC list. She has written a letter to him in this regard.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X