For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திரைப்பட பயிற்சி கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மல்டி மீடியா, புகைப்பட பயிற்சி: ஜெயலலிதா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Multimedia training to differently abled persons: Jaya
சென்னை: கை, கால் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ள 200 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மல்டி மீடியா மற்றும் புகைப்பட பயிற்சி அளிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது:

'மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம், கை, கால் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகள் 100 நபர்களுக்கு ஒரு மாத பல்லூடக பயிற்சி (மல்டிமீடியா டிரெயினிங்). 100 நபர்களுக்கு இலவச புகைப்பட பயிற்சி (டிஜிட்டல் போட்டோகிராபி டிரெயினிங்) சென்னை, தேசிய திரைப்பட வளர்ச்சிகழகத்தில் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா ரூ.21 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

இப்பயிற்சிக்கான தகுதிகளாக, மாற்றுத்திறனாளிகள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியும், 16 முதல் 40 வயது வரம்புக்குள் இருக்க வேண்டும். விடுதி வசதி தேவைப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு விடுதி வசதியும் மற்றும் பயிற்சி உதவித் தொகையாக ரூ.1000மும் வழங்கப்படும்.

இந்தப்பயிற்சிக்கு விருப்பமுள்ள மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் கல்வி தகுதி சான்று நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன், பெயர் மற்றும் முகவரி, வயது, கல்வித்தகுதி, மாற்றுத்திறன் தன்மை மற்றும் சதவீதம், விடுதி வசதி தேவையா என்ற விவரம், தொலைபேசி எண் ஆகிய விவரங்களுடன் அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்களுக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 16.8.2013க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
CM Jayalalitha has said that the govt will give training to differently abled persons in multi media and photography.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X