For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிந்துரக்சக் நீர்மூழ்கிக் கப்பலில் நடந்தது 2வது வெடிவிபத்து: முதல் விபத்து 2010ல்- ஒருவர் பலியானார்!

By Chakra
Google Oneindia Tamil News

This is second major blast in INS Sindhurakshak; First accident in 2010 at Visakhapatnam
மும்பை: மும்பை கடற்படைத் தளத்தில் நேற்றிரவு வெடிவிபத்து ஏற்பட்டு சேதமடைந்துள்ள ஐஎன்எஸ் சிந்துரக்சக் நீர்மூழ்கிக் கப்பல் 2010ம் ஆண்டிலும் இதே போன்ற ஒரு விபத்தை சந்தித்துள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது இதில் வெடிவிபத்து ஏற்பட்டது.

அப்போது இதன் பேட்டரிகளில் இருந்த குறைபாடான வால்வில் இருந்து ஹைட்ரஜன் வாயு கசிந்ததால் வெடி விபத்து ஏற்பட்டது. அதில் ஒரு வீரர் பலியானார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தையடுத்தே இந்த நீர்மூழ்கிக் கப்பல் ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டு மேம்படுத்தப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டு காலம் இதில் பராமரிப்பு மற்றும் ரிப்பேர் பணிகள் நடந்தன.

ரஷ்யாவின் ஸ்வெஸ்டாக்ச்கா கப்பல் கட்டும் தளத்தில் வைத்து 2010ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2012ம் ஆண்டு அக்டோபர் வரை இந்த பராமரிப்பும் மேம்படுத்தும் பணியும் நடந்தது.

இதையடுத்து இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கபட்டது. இந் நிலையில் தான் நேற்றிரவு மும்பை கடற்படைத் தளத்தில் வைத்து மீண்டும் விபத்துள்ளாகியுள்ளது ஐஎன்எஸ் சிந்துரக்சக் நீர்மூழ்கிக் கப்பல்.

இன்னொரு நீர்மூழ்கி விபத்து:

அதே போல ஐஎன்எஸ் சிந்துகோஷ் என்ற நீர்மூழ்கிக் கப்பல் 2008ம் ஆண்டு ஜனவரியில் ஒரு சரக்குக் கப்பலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

மும்பை கடற்படைத் தளத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது. இதில் நீர்மூழ்கி பெரும் சேதமடைந்தது.

English summary
A fire broke out aboard INS Sindhurakshak while she was in Visakhapatnam in February 2010. One sailor was killed and two others injured. Navy officials reported that the fire had been caused by an explosion in the submarine's battery compartment, due to a faulty battery valve that leaked hydrogen. After the fire damage in 2010, Sindhurakshak was sent to Russia for a two and a half year refit. In August 2010, INS Sindhurakshak arrived at Zvezdochka shipyard in Russia, for an overhaul and upgrade.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X