For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடடா, டெலிபோன் டைரக்டரி செத்துப் போயிருச்சே...!

Google Oneindia Tamil News

டெல்லி: ஒரு காலத்தில் அதுதான் எல்லோருக்கும் தெய்வம் போல.. பகவத் கீதை போல, பைபிள் போல, குரான் போல... ஆனால் இன்று அந்த பெருமை போய் விட்டது. காணாமலேயே போய் விட்டது.. ஏன் மரி்த்துப் போய் விட்டது. அதுதான் டெலிபோன் டைரக்டரி.

தொழில்நுட்ப வளர்ச்சியின் விஸ்வரூபம் காரணமாக இன்று டெலிபோன் டைரக்டரி காணாமலேயோ போய் விட்டது.

பருத்து, பெருத்துக் காணப்பட்ட டெலிபோன் டைரக்டரிகளை இன்று தேடித்தான் போய்ப் பார்க்க வேண்டும்.

முக்கியப் புத்தகம்

முக்கியப் புத்தகம்

பாடப் புத்தகங்களுக்கு அடுத்து ஒரு காலத்தில் டெலிபோன் டைரக்டரிதான் மிக முக்கியமான புத்தகமாக மக்களால் பார்க்கப்பட்டது.

போனை விட முக்கியமானது டைரக்டரிதான்

போனை விட முக்கியமானது டைரக்டரிதான்

தொலைபேசி அதாவது லேன்ட்லைன் வைத்திருந்தவர்கள் வீடுகளிலெல்லாம் இந்த டெலிபோன் டைரக்டரியைப் பார்க்கலாம். அது இல்லாத வீடு ஒன்று இருக்குமென்றால் அது போன் இல்லாத வீடாகவே இருக்கும்.

ஆயிரக்கணக்கான எண்களுடன்

ஆயிரக்கணக்கான எண்களுடன்

ஆயிரக்கணக்கான எண்களை உள்ளடக்கிய அந்த டெலிபோன் டைரக்டரி போன் வைத்திருந்தவர்களுக்கு பொக்கிஷமாக இருந்தது.

எந்திரன் சிட்டி போல

எந்திரன் சிட்டி போல

பலருக்கு அது பொழுது போக்கு புத்தகமாகவும் இருந்தது. எந்திரன் படத்தில் சிட்டி ரோபோ, டைரக்டரியைப் புரட்டிப் பார்ப்பது போல பலரும் பொழுது போகாவிட்டால் டைரக்டரியை எடுத்துப் பார்த்து ரசிப்பார்கள்.. ஆனால் இது இன்று பழங்கதை.

இது கூகுள் சர்ச் காலம்

இது கூகுள் சர்ச் காலம்

தற்போது எல்லாமே இன்டர்நெட்டாகி விட்டது. பேதி மாத்திரை என்ன சாப்பிடலாம் என்பதையும் நெட்டில் தேடிப் பார்க்கலாம். தொலைபேசி எண்ணையும் நெட்டிலேயே பார்த்துக் கொள்கிறார்கள்.

சிடிக்கு மாறிய பிஎஸ்என்எல்

சிடிக்கு மாறிய பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் நிறுவனமும் இப்போது சிடிக்கு மாறி விட்டது. எத்தனை எண்கள் இருந்தாலும் அத்தனையையும் சிடியில் போட்டு கொடுத்து விடுகிறது பிஎஸ்என்எல். இதனால் வாடிக்கையாளர்களுக்கும் புத்தகத்தை தடவிப் பார்த்து நம்பரைத் தேட வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விட்டது.

சின்னப்புள்ளங்களுக்கு தெரியாமலேயே போயிருச்சே

சின்னப்புள்ளங்களுக்கு தெரியாமலேயே போயிருச்சே

இன்றைய தலைமுறையினருக்கு டெலிபோன் டைரக்டரி என்று ஒன்று இருந்தது என்பது தெரியாமலேயே போய் விட்டது - கிட்டத்தட்ட.

கூகுள்தான் குற்றவாளி...

கூகுள்தான் குற்றவாளி...

பலரும் கூகுள் சர்ச்தான் டெலிபோன் டைரக்டரியின் மறைவுக்குக் காரணம் என குறை கூறுகிறார்கள்.

புக் வாங்க நடந்தது ஒரு காலம்

புக் வாங்க நடந்தது ஒரு காலம்

முன்பு டெலிபோன் டைரக்டரியை வாங்குவதற்காக படையெடுத்துப் போக வேண்டியிருந்தது. பெட்ரோல் பங்குகளில் வைத்து விநியோகித்தார்கள். எக்சேஞ்சுகளுக்கு வரச் சொல்லி கொடுத்தார்கள். அதெல்லாம் இப்போது பழைய நெனப்புடா பேராண்டி கதையாகி விட்டது.

கடைசியாக வந்தது 2000மாவது ஆண்டுதான்

கடைசியாக வந்தது 2000மாவது ஆண்டுதான்

டெல்லி மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிட்டெட் நிறுவனம் கடைசியாக 2000மாவது ஆண்டுதான் டெலிபோன் டைரக்டரியை அச்சடித்ததாம். அதற்குப் பிறகு அது வெளியிடவே இல்லை.

கடைசிப் புக்கை காப்பாற்றி வரும் பான்ட்யா

கடைசிப் புக்கை காப்பாற்றி வரும் பான்ட்யா

மும்பையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியான ஆர்.ஆர்.பான்ட்யா என்பவர் மும்பை மகாநகர் டெலிபோன் நிகாம் லிமிட்டெட் கடைசியாக வெளியிட்ட 3 பெரிய டைரக்டரிகளை பத்திரமாக பொக்கிஷம் போல பாதுகாத்து வருகிறாராம். இது 1999ல் அச்சடிக்கப்பட்டதாகும். மொத்தம் 4000 பக்கங்கள் அதில் உள்ளன.

பல நகரங்களில் மூடு விழா

பல நகரங்களில் மூடு விழா

இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் இப்போது டைரக்டரி வெளியிடப்படுவதே இல்லையாம். நிறுத்தி விட்டனராம் அச்சடிப்பதை.

கூகுளில் போய் தேடினால்

கூகுளில் போய் தேடினால்

கூகுளில் போய் டெலிபோன் டைரக்டரி என்று அடித்தால், அது ஆன்லைன் டைரக்டரிக்கான லிங்க்கைக் காட்டுகிறது.. !

English summary
Technology is claiming yet another relic. Remember those big fat books that made us proudly proclaim in the 1970s and 1980s that we owned a telephone? Alas, with the advent of the internet and smartphones that can store hundreds of numbers, the telephone directory got lost in the clutter of most households and offices to the extent that the majority of the current generation is unaware that such a publication once existed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X