For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிறையில் ஜெகன்மோகன் ரெட்டி காலவரையற்ற உண்ணாவிரதம்

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சிறைக்குள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

ஹைதராபாத்தின் சன்சலகுடா மத்திய சிறையில் ரெட்டி அடைக்கப்பட்டுள்ளார். அங்கு இன்று அவர் தனது உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

கடப்பா எம்.பியான ரெட்டி, டீ கூட சாப்பிட மறுத்து விட்டாராம். காலை உண்வு, மதிய உணவையும் அவர் சாப்பிடவில்லையாம்.

சிறை அதிகாரிகளுக்கு ஜெகனின் உண்ணாவிரதம் குறித்து முதலில் தெரியவில்லையாம். மேலும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முன்கூட்டியே தங்களிடம் ஜெகன் தெரிவிக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Jagan mohan reddy

ஏற்கனவே, உண்ணாவிரதம் இருந்தால் பார்வையாளர்களை சந்திக்க ஜெகனுக்கு அனுமதி மறுக்கப்படும் என்று சிறை அதிகாரிகள் எச்சரிக்கை வடுத்திரு்நதனர் என்பது நினைவிருக்கலாம். மேலும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிறப்புசலுகைகளும் ரத்தாகும் என்றும் அவர்கள் எச்சரித்திருந்தனர்.

கடந்த ஒரு வருடமாக சிறையில் அடைபட்டுள்ளார் ஜெகன். அவரது தாயார் விஜயம்மா சமீபத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார் என்பது நினைவிருக்கலாம். ஆனால் 6வது நாளிலேயே அவரது உண்ணாவிரதத்தை கட்டாயப்படுத்தி முடித்து விட்டனர் ஆந்திர காவல்துறையினர்.

English summary
Opposing the bifurcation of Andhra Pradesh, YSR Congress party president Y.S. Jagan Mohan Reddy began an indefinite fast on Sunday inside the Chanchalguda Central Jail in Hyderabad. Jagan, as the MP from Kadapa is popularly known, refused tea and breakfast on Sunday morning, as his fast began.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X