பொருளாதார சிக்கல்.. பிரணாப் மீது தொடர்ந்து குற்றப்பத்திரிகை வாசிக்கும் ப.சிதம்பரம்!
டெல்லி: ரூபாய் மதிப்பு, பொருளாதார தடுமாற்றம், பங்குச் சந்தை சரிவு போன்றவற்று முன்னாள் நிதி அமைச்சரான தற்போதைய ஜனதாதிபதி பிரணாப் முகர்ஜியே காரணம் என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.
ரூபாய் மதிப்பு சரிவு, பொருளாதார தடுமாற்றம் போன்றவற்றுக்கு பொதுவாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையை காரணமாக சொல்வார் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம். ஆனால் அண்மைக்காலமாக உள்நாட்டு நடவடிக்கைகளும்கூட இந்த சிக்கல்களுக்குக் காரணம் என்று பேசி வருகிறார் ப. சிதம்பரம்.

ராஜ்யசபாவில் நேற்று ரூபாய் மதிப்பு சரிவு தொடர்பாக பேசிய ப.சிதம்பரம், 2009-11ஆம் ஆண்டு காலத்தில் நடப்பு கணக்கு பற்றாக்குறையை கையாண்ட விதத்தில் குறைபாடு இருப்பதாக சுட்டிக்காட்டினார். அதாவது அப்போது நிதி அமைச்சராக இருந்தவர் பிரணாப் முகர்ஜி. அவர்காலத்தில் மேற்கொண்ட நடைமுறைகளும் தற்போதைய பொருளாதார சிக்கலுக்குக் காரணம் என்று குற்றம்சாட்டினார் சிதம்பரம்.
அத்துடன் இல்லாமல் தாம் பொறுப்பேற்ற பின்னர் மேற்கொண்ட நடவடிக்கைகள் அதன் விளைவுகளையும் பட்டியலிட்டுப் பேசினார் சிதம்பரம்.
நேற்று மட்டுமின்றி கடந்த சில நாட்களுக்கு முன்பும் கூட செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சிதம்பரம், பிரணாப் முகர்ஜி பொறுப்பு வகித்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது/
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications