இரவினில் ஆட்டம்... பகலினில் தூக்கம்: இது தாங்க ‘சிக்’ லீவுக்கு காரணமாம்
லண்டன்: இரவில் சரியாக தூங்காத காரணத்தால் இங்கிலாந்தில் வருடத்துக்கு 60 லட்சம் சிக் லீவ் எடுக்கிறார்களாம் அங்குள்ள தொழிலாளர்கள்.
தொழிலாளர்கள் இப்படி சரியாக தூங்காமல் அடிக்கடி லீவு எடுப்பதால் இங்கிலாந்து நாட்டின் பொருளாதாரத்திற்கு 61.1 கோடி பவுண்டு அளவுக்கு இழப்பு ஏற்படுகிறதாம்.
இரவு தூங்காமல் அதிக நேரம் விழித்திருப்பதால்தான் அடிக்கடி இப்படி லீவு போடுகிறார்களாம் அங்குள்ள தொழிலாளர்கள். சர்வே ஒன்றின் மூலம் இதைத் தெரிவித்துள்ளனர்.

ஐந்தில் ஒருவர்
இதுதொடர்பாக 2044 பேரிடம் ஆய்வு நடத்தியுள்ளனர். அதில் ஐந்தில் ஒருவர் இரவு சரியாக தூங்காமல் போவதால் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டு விடுப்பு எடுப்பதாக கூறியுள்ளனர்.

13 சதவீதம் பேருக்குத்தான் நிம்மதியான தூக்கம்
சர்வேயில் கலந்து கொண்டவர்களில் 13 சதவீதம் பேர்தான் நிம்மதியாக தூங்குகிறார்களாம்.

சரியான நேரத்தில் விழிப்பு
காலையில் சரியான நேரத்திற்கு எழுந்திருப்போர் மூன்றில் ஒரு பங்கு பேர் ஆவர்.

காலையிலேயே எழுந்திருக்கனுமா
32 சதவீதம் பேர் காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும் என்ற நினைப்பே தங்களை டென்ஷனாக்குவதாக கூறியுள்ளனர்.

பணக் கவலை பாஸ்..
26 சதவீதம் பேர் பணக்கவலை, வேலைப்பளு காரணமாக சீக்கிரம் தூங்க முடியாமலும், காலையில் எழுந்திருக்க முடியாமலும் அவதிப்படுவதாக கூறியுளனர்.

பஸ்சுல பார்த்துக்கலாம்
ஆறில் ஒரு பங்குப் பேர் தங்களது வேலைக்குப் போகும் வழியில் பஸ், ரயில் போன்றவற்றில் குட்டித் தூக்கம் போட்டுக் கொள்கிறார்களாம்.

வேலை பார்க்குமிடத்தில் கூட தூங்கலாமே
வேலை பார்க்கும் இடத்திலேயே தூங்குவோர் 7 சதவீதம் உள்ளனராம்.

மீட்டிங்கில் கூட தூங்கறாங்கப்பா
அதேசமயம் அலுவலகத்தில் நடைபெறும் மீட்டிங்குளில் 4 சதவீதம் பேர் தூங்குகிறார்களாம்.

44 சதவீதம் பேர் புதிய பறவை சிவாஜி போல
44 சதவீதம் பேர் புதிய பறவையில் வரும் சிவாஜி கணேசன் போல எங்கே நிம்மதி என்று அலைவோராக உள்ளனராம். இவர்கள் வார இறுதி நாட்களில் கூட சரியாக தூங்குவதில்லையாம்.சேர்ந்தார் போல 30 நிமிடங்கள் கூட தூங்குவதில்லையாம் இவர்கள்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications