For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்ணாளனைத் தேடி காத்திருக்கும் 5 லட்சம் சீனப் பெண்கள்!

Google Oneindia Tamil News

ஷாங்காய்: சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கிட்டத்தட்ட 5 லட்சம் பெண்கள் நல்ல கணவர் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

இவர்கள் அனைவருமே காதல் மற்றும் திருமண வயதைத் தாண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல துணை கிடைக்காமல் தவிக்கிறார்களாம் இவர்கள்.

எத்தனை டேட்டிங் போவது

எத்தனை டேட்டிங் போவது

எத்தனையோ முறை டேட்டிங் போயும் கூட தங்களுக்கு நல்ல காதலர் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள் இப்பெண்கள்.

31 வயதாகியும் முடியலையே...

31 வயதாகியும் முடியலையே...

ஸூ ஜியாஜிக்கு 31 வயதாகிறது. நல்ல வேலை, கை நிறைய சம்பளம். ஆனால் இன்னும் திருமணமாகவில்லை. காரணம் நல்ல மாப்பிள்ளை கிடைக்கவில்லை. இதனால் வீட்டிலும், அலுவலகத்திலும் நிறைய கேள்விகளை எதிர்கொண்டு தர்மசங்கடத்தில் தவிக்கிறாராம் ஸூ.

படித்தாலே பிரச்சினைதான்

படித்தாலே பிரச்சினைதான்

இதுகுறித்து ஸூ கூறுகையில், நகர்ப்புற சீன ஆண்கள், தங்களது மனைவி அல்லது காதலி தங்களை விட குறைந்த படிப்பை படித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். சம்பளம் குறைவாகப் பெற வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். கண்ணை மூடிக் கொண்டு திருமணம் செய்ய அவர்கள் தயாராக இல்லை. இதுதான் பெரிய பிரச்சினை என்கிறார்.

கைவிடப்பட்ட பெண்கள்

கைவிடப்பட்ட பெண்கள்

மேலும் அவர் கூறுகையில் எங்களை எல்லோரும் ஷெங்னு என்று சொல்லிக் கூப்பிடுகிறார்கள். ஷெங்னு என்றால் கைவிடப்பட்ட பெண்கள் என்று அர்த்தம். 20 வயதுகளில் திருமணமாகாவிட்டால் அப்படிப் பெயர் வைத்து விடுகிறார்கள்.

கிரேடு வைத்து திருமணம்

கிரேடு வைத்து திருமணம்

சீனாவின் பிரபலமான திருமண டிவி ஷோவை நடத்தி வரும் நி லின் என்பவர் கூறுகையில், சீன ஆண்கள் பெரும்பாலும் தங்களை விட குறைந்தவர்களைத்தான் திருமணம் செய்ய முயலுகின்றனர். ஏ கிரேடு ஆண்கள் பி கிரேடு பெண்களைத் திருமணம் செய்கின்னர். பி கிரேடு ஆண்கள், சி கிரேடு பெண்களையும், சி கிரேடு ஆண்கள் டி கிரேடு பெண்களையும் மணக்கின்றனர்.

ஏ கிரேடு பெண்களுக்குத்தான் கஷ்டம்

ஏ கிரேடு பெண்களுக்குத்தான் கஷ்டம்

இதில் ஏ கிரேடு பெண்களும், டி கிரேடு ஆண்களும்தான் பார்ட்னர் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.

பெய்ஜிங்கில் மூன்றில் ஒரு பங்குப் பெண்கள்

பெய்ஜிங்கில் மூன்றில் ஒரு பங்குப் பெண்கள்

பெய்ஜிங் நகரில் 20 மற்றும் 30 வயதைத் தாண்டிய பெண்களில் மூன்றில் ஒரு பங்குப் பேர் திருமணமாகாமல் தவிக்கின்றனர். தலைநகரில் மட்டும் கிட்டத்தட்ட 5 லட்சம் பெண்கள் உரிய கணவர் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

அரசே ஏற்பாடு செய்யும் ஜோடிப் பொருத்தம்

அரசே ஏற்பாடு செய்யும் ஜோடிப் பொருத்தம்

ஷாங்காய் நகரில் திருமணமாகமல் இருக்கும் பெண்களின் நலனுக்காக அரசே வரண் பார்க்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து தருகிறதாம். இருந்தும் கூட உரிய கணவர்களைப் பெறும் பெண்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறதாம்.

English summary
Xu Jiajie has gone on countless blind dates and to numerous match-making events over the past five years in search of a husband. At 31, the baby-faced office worker from Shanghai is under enormous pressure from family and friends to get married. But the right man is hard to find, she says, a big issue for urban, educated and well-paid Chinese women in a society where the husband's social status is traditionally above the wife's .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X