For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதியூரப்பாவை மீண்டும் பாஜகவில் சேர்க்க மோடியுடன் டிஸ்கஸ் செய்த சதானந்த கெளடா

Google Oneindia Tamil News

Narendra modi and Sadananda gowda
காந்திநகர்: கர்நாடக முன்னாள் முதல்வர் எட்டியூரப்பாவை மீண்டும் பாஜகவில் சேர்க்கும் விவகாரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் சதானந்த கெளடா, நரேந்திர மோடியுடன் பேசியுள்ளார்.

காந்தி நகர் வந்த அவர் மோடியைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்துப் பேசினார். இது கடந்த ஒரு மாதத்தில் 2வது சந்திப்பாகும்.

தற்போது கெளடா கர்நாடக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். அவருடன் மேலும் 3 பேர் கொண்ட குழுவும் மோடியுடனான சந்திப்பின்போது உடன் இருந்தது.

பின்னர் கெளடா கூறுகையில், கர்நாடக மாநில பாஜக அரசியல் விவகாரம் தொடர்பாக பேசினோம். அதை வெளியில் சொல்ல முடியாது. லோக்சபா தேர்தல் எதிரொலியாக இந்த ஆலோசனை நடந்தது என்றார்.

எட்டியூரப்பா மறு வருகை குறித்தும் பேசினீர்களா என்ற கேள்விக்கு அதுகுறித்தும் பேசப்பட்டது. ஆனால் அதை வெளிப்படையாக சொல்ல முடியாது என்றார்.

கர்நாடகத்தி்ல ஊழல் வழக்கில் சிக்கியதைத் தொடர்ந்து எட்டியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து முதல்வராக அமர்ந்தவர் அவரது சீடராக கருதப்பட்ட கெளடா. இருப்பினும் தான் சொன்னதை அவர் கேட்கவில்லை என்று கடுப்பாகிப் போன எட்டியூரப்பா பாஜகவை வி்ட்டு விலகி புதுக் கட்சி தொடங்கினார் என்பது நினைவிருக்கலாம்.

ஆனால் தற்போது கர்நாடகத்தில் பாஜக அடியோடு காலி செய்யப்பட்டு விட்டதாலும், எட்டியூரப்பாவுக்கு இணையான தலைவரா கண்டுபிடிக்க முடியாமல் திணறுவதாலும், மீண்டும் அவரை கட்சியில் சேர்க்க முயற்சி நடக்கிறது. அதன் எதிரொலியாகவே கெளடா, மோடி சந்திப்பு நடந்துள்ளதாக தெரிகிறது.

English summary
Former Karnataka chief minister D V Sadananda Gowda met Gujarat chief minister Narendra Modi for the second time in a month to discuss the return of former chief minister B S Yeddyurappa to the BJP fold along with the prevailing political scenario in Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X