Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிகாலை காளான் வேட்டை..எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக் குண்டு! இரண்டு பெண்கள் கொல்லப்பட்டது எப்படி?

Subscribe to Oneindia Tamil

அரியலூர் : அரியலூர் அருகே காளான் பறிக்க காட்டுப் பகுதிக்குள் சென்ற இரண்டு பெண்கள் கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், அவர்கள் கொல்லப்பட்டது எப்படி? ஏன் கொலை செய்தேன் என கொலையாளியான வேட்டைக்காரன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியவளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மலர்விழி, கண்ணகி இவர்கள் இரண்டு பேரும் அப்பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் வழக்கமாக காளான் பறிக்க செல்வது வழக்கம்.

அதேபோன்று கடந்த 22ஆம் தேதி அதிகாலையில் காளான் பறிக்க சென்ற போது இரண்டு பேரும் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த கொடூர கொலை சம்பவம் அரியலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அரியலூரில் அதிர்ச்சி

அரியலூரில் அதிர்ச்சி

இது குறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இந்த பகுதியில் வேட்டையில் ஈடுபட்ட நபர் தான் கொலையாளி என்பதை உறுதி செய்தனர். அதனை தொடர்ந்து அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் வயது என்பவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் இரண்டு பெண்களையும் தான் தான் கொலை செய்தேன் என்று ஒப்புக்கொண்டார்.

காட்டுபன்றி வேட்டை

காட்டுபன்றி வேட்டை

அப்போது பால்ராஜ் தான் வழக்கமாக அதிகாலை நேரங்களில் காட்டுப்பன்றி வேட்டைக்கு செல்வதாகவும் அப்போது கடந்த சில நாட்களாக இந்த 2 பெண்களும் காளான் பறிக்க வருவதை நோட்டம் கண்டதாகவும் அவர்களின் நகைகளை பறிக்க திட்டமிட்டு இருந்ததாகவும் கூறியுள்ளார். சம்பவத்தன்று புதருக்குள் அசைவு கேட்டதனால் தனது நாட்டு துப்பாக்கியால் அங்கே நோக்கி சுட்டேன் அப்போது கண்ணகியின் தொடையில் குண்டு பாய்ந்து அலறினார்.

ஆத்திரத்தில் கொலை

ஆத்திரத்தில் கொலை


இந்த நிலையில் அருகே காளான் பறித்துக் கொண்டிருந்த மலர்விழி அங்கிருந்து ஓடி வந்து தன்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரம் அடைந்த நான் துப்பாக்கியின் பின்பக்கம் திருப்பி கட்டையால் தலையில் சரமாரியாக தாக்கினேன். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார். இந்த நிலையில் கண்ணகி தனது செல்போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

 அதிரடி கைது

அதிரடி கைது

இதனால் ஆத்திரம் அடைந்த நான் அவரிடம் இருந்த செல்போனை பிடுங்கி சுவிட்ச் ஆப் செய்து விட்டு அவரை தான் வைத்திருந்த சூரி கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு மலர்விழி அணிந்து இருந்த 6 1/2 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து கொண்டு காரைக்கால் தப்பிச் சென்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து அவரிடம் இருந்து தாலிச் சங்கிலி , நாட்டுத் துப்பாக்கி மற்றும் சூரிக் கத்தியை பறிமுதல் செய்தனர். பின்னர் ஜெயங்கொண்டம் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் பால்ராஜ் கைது செய்து செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+