தெருநாயை கூட விட்டு வைக்கவில்லை.. இயற்கைக்கு மாறாக உறவு வைத்த 4 பேர்? பெங்களூரில் வினோத புகார்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் தெருநாயுடன் 4 பேர் இயற்கைக்கு மாறான உறவு வைத்து துன்புறுத்தியதாக பெண் ஒருவர் போலீசில் பரபரப்பான புகார் செய்துள்ளார். இதையடுத்து 25 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார் மாயமான தெருநாயை மீட்டுள்ளனர். இந்த வித்தியாசமான புகார் போலீசார் எப்படி விசாரிக்க போகிறார்கள்? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

பொதுவாக தாம்பத்திய உறவு என்பது திருமணமான பெண்ணுக்கும், ஆணுக்கும் இடையே நடக்கிறது. ஆனால் இப்போது கள்ளக்காதல் உறவை கூட சிலர் வைத்துள்ளனர். இது ஒருபக்கம்.

a-woman-complaint-against-4-person-and-allegedly-unnatural-sex-with-stray-dog-in-bengaluru

ஆனால் மறுபக்கம் வித்தியாசமான எண்ணம் கொண்டவர்களும் உள்ளனர். ஓரினச்சேர்க்கை, விலங்குகளுடன் இயற்கைக்கு மாறாக உறவு வைத்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். நம் நாட்டை பொறுத்தவரை இத்தகைய உறவுகள் சட்டவிரோதமானது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் தண்டனைகள் கிடைக்கும்.

இந்நிலையில் தான் தற்போது பெங்களூரில் வித்தியாசமான புகார் பதிவாகி உள்ளது. அதாவது பெங்களூர் பெல்லந்தூர் அருகே சர்ஜாபுரா ரோட்டில் கொடதி கிராமம் உள்ளது. கடந்த மாதம் 15ம் தேதி பெண் ஒருவர் தெருநாய்களுக்கு உணவு வைத்து கொண்டிருந்தார். அதன்பிறகு அந்த பெண் வர்த்தூர் போலீசில் புகார் செய்தார்.

அந்த புகார் போலீசாரை அதிர வைத்தது. புகாரில், ‛‛தெருநாய்களுக்கு அக்டோபர் 15ம் தேதி உணவு வைத்தேன். அப்போது தெருநாயுடன் 4 பேர் இயற்கைக்கு மாறாக உறவு வைத்தனர். தற்போது அந்த நாயும், 4 பேரும் மாயமாகிவிட்டனர். நாயை கண்டுபிடித்து காப்பற்ற வேண்டும். அதேவேளையில் தெருநாயுடன் இயற்கைக்கு மாறாக உறவு வைத்த 4 பேரையும் கைது செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த புகாரை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள 25 சிசிடிவி கேமராக்களை ஆய்வு மேற்கொண்டனர். 15 நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு தெருநாய் கண்டுபிடிக்கப்பட்டது. தெருநாயை போலீசார் மீட்டனர். இந்த நாய்க்கு Vaginal டெஸ்ட் எடுக்கப்பட உள்ளது. இந்த டெஸ்ட்டில் தெருநாய் இயற்கைக்கு மாறான உறவால் பாதிக்கப்பட்டதா? இல்லையா? என்பது தெரியவரும்.

இதுபற்றி போலீஸ் சார்பில் கேட்டபோது, ‛‛தெருநாய்க்கு வெஜைனல் டெஸ்ட் மேற்கொள்ளப்பட உள்ளது. அதேபோல் தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்படும். இதன்மூலம் தெருநாய் இயற்கைக்கு மாறான உறவால் பாதிக்கப்பட்டதா? இல்லையா? என்பது தெரியவரும். ஒருவேளை தெருநாய் பாதிக்கப்பட்டால் அதன்பிறகு சம்பந்தப்பட்ட 4 பேர் குறித்து விசாரணை நடத்துவோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+