கொரோனாவை குணப்படுத்துவதாக வதந்தி.. ஆந்திராவை கலக்கிய ஆயுர்வேத மருந்து.. கர்நாடகாவிலும் சப்ளை தீவிரம்
பெங்களூர்: ஆந்திராவில் கொரோனாவை குணப்படுத்துவதாக கூறி விற்பனை செய்யப்பட்ட மர்ம "ஆனந்தையா" மருந்து இப்போது கர்நாடகாவிலும் வழங்கப்படுகிறதாம்.
கொரோனா தொற்றுநோயை குணப்படுத்த ஒரு வகை மூலிகை மருந்து உதவுகிறது என்று பலர் நம்புகிறார்கள். ஆந்திராவில் உள்ள ஒரு கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் இந்த மருந்துக்காக ஒன்றுகூடியது செய்திகளில் வெளியாகி நாடு முழுக்க இதுகுறித்த பேச்சு எழுந்தது.

கிருஷ்ணபட்டணம்
கிருஷ்ணபட்டணம் பகுதியில் போரிஜ் ஆனந்தையா என்பவர் மூலிகையை வைத்து இப்படி ஒரு மருந்தை தயாரித்து கொரோனாவை குணப்படுத்தும் என்று சப்ளை செய்திருந்தார். இதையடுத்து இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு. நெல்லூர் மாவட்ட ஆட்சியரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழு ஆனந்தையா, ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு தகுதி வாய்ந்த நிபுணர் அல்ல என்று கண்டுபிடித்தது. அவர் உருவாக்கிய மூலிகை மருந்துக்கு அறிவியல் ரீதியாக நிரூபணம் செய்யும் திறன் இல்லை என்றும் தெரிவித்தது.

மூலிகை மருந்து
இந்த நிலையில் இப்போது கர்நாடகாவின் பெல்லாரி மற்றும் கொப்பல் மாவட்டங்களில் 15,000 பேருக்கு இந்த மருந்து வழங்கப்பட்டுள்ளது. ஹம்பியில் உள்ள ஸ்ரீ பம்பக்ஷேத்ரா பக்தினகரசம்ராஜ் மடத்தின் சார்பில் மருந்து விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த மூலிகை மருந்துகளை விநியோகிக்க அனுமதிக்குமாறு கோரி கர்நாடக முதலமைச்சருக்கும் சுகாதார அமைச்சருக்கும் சாமியார், கோவிந்தானந்தா கடிதமும் எழுதியுள்ளார்.

அரசு ஆட்சேபனை
30,000 பேருக்கு ரூ .5 லட்சம் மதிப்புள்ள மருந்துகளை வாங்கி சாமியார் இருப்பு வைத்துள்ளார். ஏற்கனவே 15,000 பேர் மருந்துகளை பெற்றுள்ளனர்.
ஆனால், மருந்து விநியோகத்தை நிறுத்துமாறு பெல்லாரி காவல்துறையினர் அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
சரியான நெறிமுறை இல்லாமல் கொரோனா மருந்துகளை விநியோகிக்க யாருக்கும் இதுபோன்ற அனுமதி வழங்கப்படவில்லை என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆரோக்கிய மருந்து
"இது வேம்பு, தேன், மசாலா பொருட்கள் மற்றும் பலவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்து. இந்த மருந்துகள் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதை பரிசோதிக்க அலோபதி சமூகத்திற்கு நான் சவால் விடுகிறேன். இந்த மருந்துகளை விநியோகிக்க ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது" என்று கோவிந்தானந்தா கூறியுள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications