Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு சிக்னல் தவறுக்காக 'நீங்கள் கன்னடரா?' என கேட்டு பெங்களூர் தொழிலதிபரை கொடூரமாக தாக்கிய பயங்கரம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் கோடிகேஹள்ளி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு, 52 வயதான தொழிலதிபர் அஜித் சிங், தனது காரில் சென்று கொண்டிருந்த போது சிக்னல் போடாததால் அவரை பைக்கில் வந்த இளைஞர்கள் கடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் கோடிகேஹள்ளி டாட்டா நகர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் அஜித் சிங் (52). இவர் செவ்வாய்க்கிழமை தனது காரை திடீரென வலதுபுறம் திருப்பியபோது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

bangalore businessman

கார் திரும்பும்போது 'சிக்னல்' (Indicator) காட்டவில்லை என்று அந்த இளைஞர்கள் சண்டையிட்டனர். சிக்னல் காட்டாததால் தாங்கள் சுதாரிக்கவில்லை என்றால் விபத்து நடந்திருக்கும் என வாக்குவாதம் செய்தனர்.

அஜித் சிங் நன்றாக கன்னடம் பேசியபோதிலும், அவர் உள்ளூர்க்காரரா அல்லது வெளியூர்க்காரரா என்று கேட்டு அந்த இளைஞர்கள் வம்பிழுத்துள்ளனர். அவரது அடையாள அட்டையையும் கேட்டு மிரட்டியுள்ளனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த இளைஞர்களுடன் மேலும் சிலரும் சேர்ந்து கொண்டனர். அவர்கள் அங்கிருந்த ஒரு இறைச்சிக் கடையின் மரப்பலகையை எடுத்து அஜித் சிங்கின் கால்களில் பலமாகத் தாக்கினர். அவர் தனது குடியிருப்புக்குள் ஓடியபோதும் விடாமல் துரத்திச் சென்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

தகவல் அறிந்து 'ஹொய்சாலா' ரோந்து வாகனம் வந்ததைக் கண்டதும் கும்பல் தப்பி ஓடியது. அஜித் சிங்கின் புகாரின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் (பிரிவுகள் 115 மற்றும் 116) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட சிலரை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சிக்னல் போடாதது தொடர்பாக ஏற்பட்ட சிறிய தகராறு, ஒரு கும்பல் தாக்குதலாக மாறியுள்ளது. போலீசார் தற்போது குற்றவாளிகளைப் பிடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+