அட! நாட்டிலேயே அதிக சம்பளம் கிடைக்கும் நகரம் இதுதானா?.. சென்னை லிஸ்டில் இருக்கா?
பெங்களூர்: நாட்டிலேயே அதிக அளவு ஊதியம் கொடுக்கும் நகரங்களில் பெங்களூர் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், மும்பை, சென்னை, டெல்லி மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்கள் அதிக அளவு ஊதியம் கொடுக்கும் நகரங்களாக உள்ளன.
இந்தியாவின் ஐடி தலைநகரம் என்று அழைக்கப்படும் நகரம் பெங்களூர். அந்த அளவிற்கு பெங்களூரில் ஐடி நிறுவனங்கள் குவிந்து கிடக்கின்றன. இந்த நிலையில், நாட்டிலேயே அதிகம் ஊதியம் கொடுக்கும் நகரங்களின் பட்டியலில் பெங்களூர் முதலிடம் பெற்றுள்ளது.

பணியாளர் கூட்டமைப்பான டீம் லீஸ் சர்வீசஸ் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23 நிதி ஆண்டுக்கான Jobs and Salary Primer Report' என்ற ஆய்வறிக்கையை டீம் லீஸ் சர்வீசஸ் வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
பல்வேறு துறைகளையும் சேர்த்து சம்பள உயர்வை பொறுத்தவரை 3.20 சதவிகிதம் முதல் 10.19 சதவிகிதமாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட கொஞ்சம் குறைவுதான். ஒட்டு மொத்த சம்பள வளர்ச்சி அதாவது உயர்வை பொறுத்தவரை கொஞ்சம் சரிவை சந்தித்து இருந்தாலும் 41 சதவீதத்திற்கும் மேலான பணிகளில் நிரந்தர ஊழியர்களுக்கும் தற்காலிக ஊழியர்களுக்கும் இடையேயான சம்பள வேறுபாடு 5 சதவீதம் என்ற அளவுக்கு மட்டுமே இருந்துள்ளது.

விற்பனை மற்றும் ஐடி துறைகளில் தேவை அதிகம் உள்ளது. அதேபோல், பெங்களூர் மும்பை, சென்னை, டெல்லி மற்றும் ஐதராபாத் ஆகிய நகரங்கள் அதிக அளவு ஊதியம் கொடுக்கும் நகரங்களாக உள்ளன. பெங்களூரை பொருத்தவரை இந்த விவகாரத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 7.79 சதவிகிதம் அதிக வளர்ச்சி கண்டுள்ளது.
அதேவேளையில், வங்கிகள், நிதி சேவைகள் மற்றும் காப்பீடுகள் ஆகிய துறைகளில் இந்த ஆண்டு சம்பளம் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக சீராக வளர்ச்சி கண்டு வந்த நிலையில், நடப்பு நிதி ஆண்டில் இந்த துறைகள் அடி வாங்கியுள்ளது. ஊதிய விவகாரங்களில் வீழ்ச்சி அடைந்து இருந்தாலும் பல்வேறு வகையான வேலை வாய்ப்புகளை கொடுப்பதில் இந்த நிதி, வங்கி மற்றும் காப்பீடு துறை முன்னணி வகிக்கிறது.

தொலைத்தொடர்பு துறையிலும் சராசரி சம்பள விகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இருந்தாலும் தகவல் தொடர்பு துறையில் ரிலேஷன்ஷிப் மேனேஜர் ரோலில் 10.19 சதவிகித உயர்வு பெங்களூரில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சந்தையில் அதிக ஊதியம் கொடுக்கும் வேலையாக இது மாறியிருக்கிறது. அதன்பிறகு மீடியா மற்றும் பொழுதுபோக்கு துறையில் கேம் டெவலப்பர் பணிக்கு அதிக ஹைக் கொடுக்கப்பட்டுள்ளது.
அதுபோக ஹாஸ்பிடாலிட்டி, ஆட்டோ மொபைல் மற்றும் அது சார்ந்த தொழில்கள், இ காமர்ஸ், டெக் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் மீடியா & பொழுதுபோக்கு ஆகிய துறைகள் சற்று சரிவை சந்தித்து இருக்கின்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications