அதிரடி.. பெங்களூர் கடை, ஓட்டல், மால்களில் இனி இது கட்டாயம்! மீறினால் அவ்வளவுதான்.. பிபிஎம்பி உத்தரவு
பெங்களூர்: பெங்களூரில் உள்ள கடைகள், ஓட்டல்களில் வைக்கப்பட்டு இருக்கும் பெயர் பலகைகளில் 60 சதவீதம் கன்னட மொழி இடம் பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என பெங்களூர் மாநகராட்சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
பெங்களூர்.. இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்று. பெங்களூரில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதனால் தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் பெங்களூரில் வசித்து கொண்டு பணி செய்து வருகின்றனர்.

தற்போதைய சூழலில் பெங்களூர் நகரின் மக்கள்தொகை என்பது ஒரு கோடியை தொட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நகரில் உள்ள கடைகள், ஓட்டல்கள், ஷாப்பிங் மால்களின் எண்ணிக்கை என்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே செல்கிறது.
பெங்களூரை பொறுத்தமட்டில் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கன்னடம் பேச தெரிந்திருந்தாலும் கூட வாசிக்க தெரியாது. இதனால் பெங்களூர் நகரில் உள்ள சாலையோர கடைகள் முதல் பெரிய பெரிய வணிக வளாகங்களில் ஆங்கிலத்தில் தான் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த போர்டில் கன்னட மொழியும் இடம் பெற்றிருக்கும். சில இடங்களில் பெயர் பலகைகளில் கன்னட மொழி இல்லாமல் கூட உள்ளது.
இதற்கிடையே தான் பெங்களூர் நகரில் உள்ள கடை, ஓட்டல்கள், வணிக வளாகங்களில் கன்னட பெயர் பலகைகள் இல்லாததை எதிர்த்து கன்னட அமைப்பினர் சமீபத்தில் போராட்டம் நடத்தினர். சிக்பேட்டையில் உள்ள கடைகளை அவர்கள் மூட வலியுறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்பட்டது. இந்நிலையில் தான் தற்போது பெங்களூர் மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சிக்பேட்டையில் நடந்த பிரச்சனையை தொடர்ந்து பெங்களூர் மாநகராட்சி கமிஷனர் துஷார் கிரிநாத் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின்போது பெயர் பலகைகளில் கன்னட மொழியை இடம்பெற செய்வது பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து தான் பெங்களூர் மாநகராட்சி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி பெங்களூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள், ஓட்டல்கள், வணிக வளாகங்களின் பெயர் பலகைகளில் 60 சதவீதம் கன்னடத்தில் எழுதப்பட்டு இருக்க வேண்டும். 2024 பிப்ரவரி மாதம் 28 ம் தேதிக்குள் பெயர் பலகைகளில் இந்த மாற்றத்தை கொண்டு வர வேண்டும். இல்லாவிட்டால் நோட்டீஸ் அனுப்பப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications