பிரிட்ஜில் 50 துண்டாக கிடந்த பெண்.. மனைவியின் மீது நெளிந்த புழுக்கள்.. பெங்களூரில் திடீர் ட்விஸ்ட்
பெங்களூர்: பெங்களூர் பெண்ணை கொலை செய்து, துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்துவிட்டு போன குற்றவாளியை தேடி விரைந்தபோது, போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.. கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்ன நடந்தது?
பெங்களூருவின் வயலிக்காவல் பகுதியை சேர்ந்தவர் மகாலட்சுமி.. 27 வயதாகிறது.. இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணமாகிவிட்டது.. கணவர் பெயர் ஹேமந்த்தாஸ் (32).. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மகாலட்சுமி கணவரை விட்டு பிரிந்துவந்துவிட்டார்.

இளம்பெண்: எனவே, பெங்களூரு வயாலிகாவல் அருகே உள்ள பசப்பா கார்டன் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, இவரது வீட்டில் துர்நாற்றம் அதிகமாக வீசியிருக்கிறது. இதனால் அந்த பகுதியில் வசித்து வருபவர்கள், உடனடியாக மகாலட்சுமியின் அம்மாவுக்கு தகவல் தந்து வரவழைத்து உள்ளே புகுந்து பார்த்தனர்.
அப்போதுதான், மகாலட்சுமி சடலமாக கிடந்ததை கண்டு அலறினார்கள்.. வீடு முழுவதும் ரத்தக் கரைகள் இருந்திருக்கின்றன.. அவரது சடலம் 50 துண்டுகளாக வெட்டப்பட்டு, பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்தது.. ஃபிரிட்ஜ் அருகில் புழுக்கள் நெளிந்திருந்தன..10 நாட்களுக்கு முன்பே இந்த கொலை நடந்திருக்கலாம் என்கிறார்கள்..
சடலம் துண்டிப்பு: மகாலட்சுமியின் தலையை மட்டுமே 3 பகுதிகளாக வெட்டப்பட்டிருந்ததாம். அவரது கால்கள் துண்டிக்கப்பட்டு, குடல், தலைமுடி உள்ளிட்ட பிற பாகங்கள் பிளாஸ்டிக் கவரில் தனியாக கட்டப்பட்டிருந்தது.
மொத்த உடல் உறுப்பு துண்டுகளையும் டாக்டர்கள் ஒன்றிணைத்து, போஸ்ட் மார்ட்டம் செய்தது டாக்டர்களுக்கே சவாலாக இருந்தது.. அதனால், உடல் பாகங்களை வரிசை எண் போட்டு டாக்டர்கள் ஒன்றாக சேர்த்தனர். சிடி ஸ்கேன் செய்யப்பட்டது.. பாலியல் தொல்லை தந்து கொலை செய்யப்பட்டாரா? என்றும் ஆய்வு செய்யப்பட்டது.
போஸ்ட் மார்ட்டம் : மிகவும் போராடியே இந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை டாக்டர்கள் செய்திருந்தனர்.. அதனால், இந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டை வைத்துதான், கொலையாளியை அடையாளம் காண கூடும் என்றும் கூறப்பட்டது.
மேலும், மகாலட்சுமியின் செல்போனையும் போலீசார் ஆய்வு செய்தனர்.. கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.. இறுதியில், கொலையாளி பற்றிய முக்கிய துப்பு தனிப்படை போலீசாருக்கு கிடைத்திருக்கிறது..
தகாத உறவு: அதாவது, மகாலட்சுமி ஒரு மாலில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போதுதான், மேற்கு வங்க இளைஞர் ஒருவருடன் மகாலட்சுமிக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. மகாலட்சுமியை வேலைக்கு வரும்போது, தினமும் இந்த இளைஞர்தான் வேலைக்கு அழைத்து வந்துள்ளார்.. இந்த இளைஞர் பெங்களூருவில் உள்ள ஆண்களுக்கான சலூன் கடையில் வேலை பார்த்து வருபவராம். உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் கூறுகிறார்கள்.
இந்த இளைஞரால்தான், தம்பதிக்குள் ஏற்கனவே தகராறு ஏற்பட்டிருக்கிறது. ஒருகட்டத்தில் மகாலட்சுமியின் நடவடிக்கை பிடிக்காமல், ஹேமந்த் தாஸ் அவரை விட்டு பிரிந்துவிட்டாராம்.. இவ்வளவு விஷயம் தெரிவதற்குள், அந்த இளைஞர் தலைமறைவாகிவிட்டார். இவருடன் சேர்த்து மேலும் 4 பேர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
செல்போன்: ஆனால், அந்த 4 பேருமே செல்போனை சுவிட்ச் ஆப் செய்திருந்தனர். அதேபோல, மகாலட்சுமியின் செல்போனை ஆராய்ந்ததில், இந்த மேற்கு வங்க இளைஞருக்கே செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டதும் உறுதியானது..
இதே சந்தேகத்தைதான், மகாலட்சுமியின் கணவரும் உறுதி செய்திருந்தார்.. மேற்கு வங்காளத்தை சேர்ந்த முக்தி ரஞ்சன் ரே மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக மகாலட்சுமியின் கணவர் சொல்லவும், அந்த இளைஞரை கைது செய்ய, 8 தனிப்படை அமைக்கப்பட்டிருந்தன.. பின்னர் முக்தி ரஞ்சன் ரே என்ற அந்த இளைஞர், மேற்கு வங்கத்தில் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகவும், அங்கு விரைந்து அவரை கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கினர்.
அதிர்ச்சி: இந்நிலையில், ஒடிசாவில் உள்ள பத்ராக் மாவட்டத்தில் துசுரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தில் முக்தி ரஞ்சன் ரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
முக்தி ரஞ்சன் ரே எப்படி இறந்தார் என்று தெரியவில்லை.. இதனால், இவரது உயிரிழப்பு குறித்து, அங்குள்ள போலீசார், பெங்களூரு போலீசுக்கு தகவல் தந்துள்ளனர்.. எனவே, ரஞ்சனின் மரணம் தற்கொலையா? கொலையா? என்ற விசாரணையை மேற்கொண்டுள்ளனர். ரஞ்சன், மகாலட்சுமி இருவருமே கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றால், 3வது நபருக்கு இதில் தொடர்பு இருக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் சொல்லும்போது, "ஒடிசாவில் உள்ள துசூரி காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், புயின்பூர் கிராமத்தில், விவசாய நிலம் அருகே உள்ள மரத்தில் ரஞ்சன் சடலமாக தொங்கியதை உறுதிப்படுத்தியிருந்தார்.. இந்த தகவல் எங்களுக்கு கிடைத்ததுமே, நாங்களுமே அந்த கிராமத்துக்கு சென்றோம். மகாலட்சுமி கொலையில், இந்த ரஞ்சனுக்கும் தொடர்பு இருக்கும் என்றும் நாங்கள் சந்தேகப்படுகிறோம். இப்போது இந்த இளைஞரின் அண்ணனை காணவில்லை.. அவரையும் தேடி வருகிறோம்" என்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications