Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வார் ரூம்".. கர்நாடகா சட்டசபைத் தேர்தல்.. வேலையை தொடங்கிய காங்கிரஸ்.. களமிறங்கிய டீம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, காங்கிரஸ் கட்சி தரப்பில் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தது. முதலமைச்சர் பதவியை மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் குமாரசாமிக்கு காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுத்தது. இருந்தும், அடுத்த ஆண்டே 2019ல் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை பாஜக பதவி விலக செய்ததையடுத்து, ஜேடியு - காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையை இழந்தது.

Congress party has formed a state-level war room team to coordinate campaign for the Assembly elections in Karnataka

இதனைத்தொடர்ந்து எடியூரப்பா தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் கட்சியில் எழுந்த எதிர்ப்பு காரணமாக கடந்த ஆண்டு எடியூரப்பா பதவி விலகினார். பின்னர் கர்நாடகா முதலமைச்சராக பசவராஜ் பொம்மை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் வரும் 2023ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

அடுத்த ஆண்டு மே மாதத்திற்கு முன்னதாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்போதே பாஜக - காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். இதற்காகவே அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகா பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

மறுபக்கம் காங்கிரஸ் கட்சி தரப்பில் கர்நாடகாவின் மூத்த தலைவர்களான சித்தராமய்யா மற்றும் டிகே சிவக்குமார் உள்ளிட்டோருடன் ராகுல் காந்தி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து கர்நாடகா காங்கிரஸ் தரப்பில் தேர்தல் பணிகளை தொடங்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி சார்பாக கட்சியின் பிரச்சாரத்தை ஒருங்கிணைக்கும் வகையில் மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறை குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு அறைக் குழுவின் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஷிகாந்த் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் 2019ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், பாஜகவுக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலுக்கு இப்போதே காங்கிரஸ் கட்சி தயாராகி வருவது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதுமட்டுமல்லாமல் கர்நாடகாவில் நடைபெறும் பாஜக ஆட்சியில் ஏற்படும் சிறுபான்மை மக்கள் பிரச்னை, இடஒதுக்கீடு பிரச்னை ஆகியவற்றை முக்கிய பேசுபொருளாக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+