சென்னபட்டணாவில் மத்திய அமைச்சர் குமாரசாமி முதுகில் குத்திய பாஜக.. அம்பலப்படுத்திய டிகே சிவகுமார்!
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் சென்னபட்டணா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தமது கூட்டணி கட்சியான மத்திய அமைச்சர் குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சிக்கு துரோகம் செய்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரையே ஆதரித்தது என அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் துணை முதல்வருமான டிகே சிவகுமார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகா மாநிலம் சென்னபட்டணா சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் அம்மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி. லோக்சபா தேர்தலில் வென்று தற்போது மத்திய அமைச்சரானதால் சென்னபட்டணா தொகுதி எம்.எல்.ஏ. பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதனால் சென்னபட்டணா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

சென்னபட்டணா தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சிபி யோகேஷ்வர் 25,413 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றார். இத்தொகுதியில் மத்திய அமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி, ஜேடிஎஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 3-வது முறையாக நிகில் குமாரசாமி தோல்வியைத் தழுவி இருக்கிறார். காங்கிரஸ் வேட்பாளரான சிபி யோகேஷ்வர், பாஜக எம்.எல்.சியாக இருந்தவர்; சென்னபட்டணாவை ஜேடிஎஸ் கட்சிக்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸுக்கு தாவி வேட்பாளரானார்.
இந்த நிலையில் சென்னபட்டணா தேர்தல் வெற்றி தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவரும் துணை முதல்வருமான டிகே சிவகுமார் கூறியிருப்பதாவது: ஜேடிஎஸ் கட்சி இல்லாத ராமநகர் உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் கனவு. சென்னபட்டணாவில் மகன் நிகில் குமாரசாமியை சதித் திட்டம் போட்டு தோற்கடித்துவிட்டதாக குமாரசாமி புலம்புகிறார். அப்படியானால் லோக்சபா தேர்தலில் என் தம்பி டிகே சுரேஷ் தோல்விக்கு யார் சதித் திட்டம் தீட்டியதாம்?
சென்னபட்டணா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் இந்த வெற்றிக்கு பாஜகவும் மிக முக்கிய காரணம். காங்கிரஸ் வேட்பாளர் சிபி யோகேஷ்வருக்கு, பாஜக நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு அளித்தது. அதுவும் யோகேஷ்வரின் தேர்தல் வெற்றிக்கு ஒரு காரணம். இவ்வாறு டிகே சிவகுமார் கூறினார். டிகே சிவகுமாரின் இந்த பேச்சால் ஜேடிஎஸ் கட்சித் தலைவர்கள் பாஜக மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications