"ஒவ்வொரு நாளும் அழுகிறேன்.. சம்பளம் கூட வெறும் ரூ.10,000 தான்" பெங்களூர் AI நிறுவன ஊழியர் குமுறல்
பெங்களூர்: இந்தக் காலத்தில் பல்வேறு வேலைகளிலும் பணிச்சுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஊழியர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள். அப்படித் தான் பெங்களூரில் பிரபல நிறுவனத்தில் வேலை செய்யும் இளைஞர் ஒருவர் வேலைப்பளுவால் பெரும் சிரமத்தைச் சந்திக்கிறாராம். இதனால் ஒவ்வொரு நாளும் தூங்கும் போது கதறி அழுவதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே பணிச்சுமை என்பது பல்வேறு தரப்பினருக்கும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. பல நிறுவனங்களில் காலை முதல் மாலை வரை பிரேக் எடுக்காமல் வேலை செய்ய வேண்டிய சூழலே இருக்கிறது. பெங்களூரில் வசிக்கும் பல ஐடி ஊழியர்கள் இது தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

பெங்களூர் ஊழியர்
அப்படித் தான் பெங்களூரில் பிரபல நிறுவனம் ஒன்றில் ஹெச்ஆர் ஆபரேஷனில் இன்டர்ன் ஆக வேலை செய்யும் ஒருவர் தனது வேலை குறித்தும் அதனால் ஏற்படும் அழுத்தம் குறித்தும் சமூக வலைத்தளத்தில் குமுறி இருக்கிறார்.
21 வயதான அவர், செயற்கை நுண்ணறிவு சார்ந்த சாப்ட்வேர் நிறுவனத்தில் தான் இன்டர்னாக வேலை செய்து வருகிறார். அவருக்கு மாதம் சம்பளமாக ரூ.10,000 மட்டுமே வழங்கப்படுகிறது. அங்கு நிலவும் டாக்சிக் வேலைச் சூழல் காரணமாகவும் அதிக வேலைப்பளு காரணமாகவும் மன உளைச்சல் ஏற்படுவதாக அவர் ரெடிட் தளத்தில் பதிவிட்டார். அவரது பதிவு சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
ஒவ்வொரு நாளும் அழுகை
இது தொடர்பாக அவர் மேலும், "நான் ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்லும் போது கதறி அழுகிறேன்.. அந்தளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. வாழ்க்கையில் தோற்றுவிட்டதாகவும், எந்தவொரு முன்னேற்றும் இல்லாமல் இந்த வேலையில் சிக்கிக் கொண்டதாக உணர்கிறேன். இன்டர்னாக வந்தது கற்றுக் கொள்ளத் தான். ஆனால், இங்கு எனக்கு மன அழுத்தம் மட்டுமே வருகிறது.
10 மணி நேரம் வேலை
ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 மணிநேரம் ஒரே இருக்கையில் அமர்ந்து வேலை செய்கிறேன்.. இடையில் 30 நிமிடங்கள் மட்டுமே இடைவேளை.. இதனால் நான் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள எந்தவொரு வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்னுடன் வேலை செய்வோர் எல்லாவற்றிற்கும் என்னைக் குறை கூறுகிறார்... எல்லாரும் என்னிடம் அவர்கள் வேலையைத் தள்ளிவிடுகிறார்கள். இதனால் பணிச்சுமை ஏற்படுகிறது. அதை நான் சரியான தேதிக்குள் முடிக்கத் தவறினால் பிறகு என்னையே குறை சொல்கிறார்கள்.
இந்த அலுவலகத்தில் எனக்கு இரண்டு பாஸ்கள் உள்ளன. முதல் பாஸ் பிரச்சினை புரிந்துகொள்ளக்கூடியவர். இதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை... ஆனால் எனது இரண்டாவது பாஸ் நல்லவர் இல்லை. சமீபத்தில் கூட வேலை தொடர்பாக எனது சிக்கலைச் சொன்னேன்.. ஆனால், அவர் அதைக் கண்டுகொள்ளவில்லை. நான் சொல்வதைக் கேட்காதது போல அவர் தன் செல்போனை பார்த்துக் கொண்டு இருந்தார். அவரைச் சுற்றியுள்ளவர்களும் அப்படியே நடந்து கொண்டனர்.
மன உளைச்சல்
ஆண்டுக்கு ₹10 லட்சம் சம்பாதிக்கும் ஒருவர் செய்யும் வேலையை விட எனக்கு அதிக வேலை தருகிறார்கள். இதுவே மன உளைச்சலுக்குப் பிரதானக் காரணமாக இருக்கிறது. இந்த அதீத பணிச்சுமையால் ஒவ்வொரு நாளும் என மனஅழுத்தம் தான். எனக்கு இந்த அலுவலகத்தில் ஒப்பந்தம் முடிய 3 மாதங்கள் இருக்கிறது. அத்தோடு இந்த கம்பெனியில் இருந்து நின்றுவிடுவேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார். அவரது போஸ்ட் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. இது தொடர்பாகப் பலரும் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.
-
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
மூழ்கடிக்கப்படும் ரூ.63,000 கோடி.. கடலுக்கு அடியில் அமையும் 73,000 டன் பிரம்மாண்டம்! என்ன மேட்டர் -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு












Click it and Unblock the Notifications