பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவுக்கு வந்து என் மக்களுக்கு கொரோனா வைரஸை பரப்ப விரும்பவில்லை.. கர்நாடக மாணவர் உருக்கம்

Google Oneindia Tamil News

பெங்களூரூ: இந்தியாவுக்கு வந்து கொரோனா வைரசை என் மக்களுக்கு பரப்ப விரும்பவில்லை என்றும் சீனாவிலேயே இருக்க விரும்பவதாகவும் கர்நாடகாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர் உருக்கமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

    கொரோனா பீதி: தனிமை படுத்தப்பட்ட ரொனால்டோ மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் பெர்குசன்

    சீனாவின் வான்லி மாகாணம், நாச்சிங் நகரில் உள்ள பல்கலைக் கழகத்தில் இந்தியர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு உள்ள விடுதியில் தங்கி மருத்துவம் படித்து வருகிறார்கள்.

    i wont spread coronavirus, did not come back india, says karnataka student who was studying in china

    கொரோனா வைஸ் பிரச்சனையால் இந்த பல்கலைக் கழகத்தில் இருந்து 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பி விட்டனர். ஆனால் சிலர் மட்டுமே அங்கே தங்கி உள்ளார்கள். அவர்களில் கர்நாடக மாநிலம், துமகூருவின் ஒசகெரேவைச் சேர்ந்தவர் சாஹில் உசேனும் ஒருவர். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக மருத்துவம் படித்து சாஹில் உசேனும் ஒருவர். இவர் கொரோனா அச்சுறுத்தலுக்கு நடுவே வீடு திரும்ப மறுத்து, விடுதியில் தங்கியுள்ளார்.

    இதையடுத்து சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதால் தனது மகனை உடனடியாக இந்தியாவுக்கு திரும்பும்படி அவரது தந்தை ரிஸ்வான் வலியுறுத்தினார். ஆனால் அதை ஏற்க மறுத்த உசேன், வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

    கொரோனா பாதித்தவருடன் பயணம் செய்த தமிழகத்தை சேர்ந்த 47 பேர்.. பட்டியலை அனுப்பியது கேரளா கொரோனா பாதித்தவருடன் பயணம் செய்த தமிழகத்தை சேர்ந்த 47 பேர்.. பட்டியலை அனுப்பியது கேரளா

    அதில், 'நான் இப்போது நலமுடன் உள்ளேன். சீனாவில் இருந்து கர்நாடகாவுக்கு நேரடி விமானங்கள் இல்லை. மூன்று விமானங்கள் மாற வேண்டும். ஒருவேளை நான் அங்கு வந்தால் பயணத்தின் போது, எனக்கு ஒரு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு அதை என் நாட்டிற்கு குறிப்பாக கர்நாடகாவில் பரப்பினால், அது ஒரு பிரச்னையாகி விடும். ஆகவே நான் இங்கே தங்கி இருக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

    மேலும், முகக்கவசம் அணிந்து தனது விடுதி அறையிலிருந்து வெளியே செல்லும் உசைன், முழு பல்கலைக்கழக வளாகத்தையும் சுற்றி நடந்து காண்பித்தார். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சீன அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    English summary
    coronavirus : karnataka student who was studying in china did not come back as virus may spread in india
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X