அடேங்கப்பா! தண்ணீர் போல குழாயில் இருந்து கொட்டிய பணம்.. ரெய்டில் சிக்கிய 'கில்லாடி' இன்ஜினியர்
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பொதுப்பணித் துறை இளநிலை பொறியாளர் ஒருவர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய போது, அந்த வீட்டின் தண்ணீர் குழாயில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கொட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சில அரசு உயர் அதிகாரிகள் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி இன்று மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
|
லஞ்ச ஒழிப்புத் துறையினர்
கர்நாடக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் 15 உயர் அதிகாரிகள் தங்கள் வருமானத்திற்குப் பல மடங்கு அதிகமாகச் சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளனர். அதன்படி அந்த 15 அதிகாரிகளைக் குறிவைத்து இன்று காலை சுமார் 60க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

கழிவு நீர் குழாய்
அதன்படி கர்நாடக பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் சாந்த கவுடா பிரதாரின் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் இருந்து அளவுக்கு அதிகமான தங்கம் நகைகள் 25 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ரெய்டு குறித்த தகவலை எப்படியோ தெரிந்து கொண்ட சாந்த கவுடா பிரதார், தன்னிடம் இருந்த பணத்தை வீட்டில் இருக்கும் தண்ணீர் குழாயில் மறைத்து வைத்துள்ளார்

கட்டுக்கட்டாக பணம்
இருப்பினும், இதனை சரியாகக் கண்டுபிடித்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், பிளம்பர் உதவியுடன் குழாயிலிருந்து பணத்தைக் கைப்பற்றினர். அந்த சின்ன குழாயில் இருந்து கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் கொட்டியதைக் கண்டு அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் மிக வேகமாகப் பரவி வருகிறது.

மெகா ரெய்டு
கர்நாடக மாநிலம் முழுவதும் நடந்து வரும் இந்த ரெய்டில் லஞ்ச ஒழிப்புத் துறையின் 8 போலீஸ் சூப்பிரண்டுகள், 400 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "ரெய்டு தொடர்ந்து நடந்து வருகிறது. பணம், விலைமதிப்பு மிக்க பொருட்கள் மற்றும் ஆவணங்களை நாங்கள் பறிமுதல் செய்துள்ளோம்" என்று அவர் கூறினார். ரெய்டு இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இது குறித்துக் கூடுதல் தகவல்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications