பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெங்களூர் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது பெண் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டு!

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூர் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா, பெண்கள் விஷயத்தில் மோசமானவர் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

பெங்களூர் தெற்கு தொகுதி, பாஜக வேட்பாளராக அக்கட்சி இளைஞரணி செயலாளர் தேஜஸ்வி சூர்யா அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வரும் ஏப்ரல் 18ம் தேதி இத்தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

6 முறை தொடர்ந்து இத்தொகுதி எம்பியாக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவையடுத்து அவர் மனைவி தேஜஸ்வினிக்கு போட்டியிட பாஜக வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளைஞரான தேஜஸ்வி சூர்யாவுக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது.

எனக்கா நிற்க சீட் இல்லை.. ஆபீஸில் வாங்கி போட்ட 300 சேர்களை தூக்கி கொண்டு போன காங்கிரஸ் எம்எல்ஏ!எனக்கா நிற்க சீட் இல்லை.. ஆபீஸில் வாங்கி போட்ட 300 சேர்களை தூக்கி கொண்டு போன காங்கிரஸ் எம்எல்ஏ!

பாலியல் புகார்

பாலியல் புகார்

இது ஒருபக்கம் அனந்தகுமார் ஆதரவாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேஜஸ்விக்கு மற்றொரு பின்னடைவும் காத்துள்ளது. அது அவர் மீதான பாலியல் புகார். ஆம்.. கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில், இதுகுறித்த ஒரு தகவலை பகிர்ந்துள்ளது. அதில் சோம் தத்தா என்ற பெண், தேஜஸ்வி சூர்யாவின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து ஒரு குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளதை ஸ்க்ரீன் ஷாட்டாக எடுத்து போட்டுள்ளனர்.

பெண் பரபரப்பு

பெண் பரபரப்பு

5 வருடங்களுக்கும் மேலாக நான் அவரால் கஷ்டப்பட்டுள்ளேன். சீரியசான விஷயங்களை கையில் எடுத்துதான் அதை நிறுத்தினேன். எனது காதலுக்கு கண்ணில்லை, ஆனால், நான்தான் அவரால் பாதிப்படைந்த முதல் பெண்ணும் கிடையாது. எல்லா ஹிந்துக்களுமே தர்மப்படிதான் வாழ்வார்கள் என சொல்லிவிட முடியாது. முழு உண்மை தெரியாமல், கண்ணை மூடிக்கொண்டு தேஜஸ்வியை ப்ரமோட் செய்யாதீர்கள். பெண் விரும்பியை, பெண்களை பயன்படுத்துபவரை, பெண்களை அடிப்பவரை நம்மை ஆள்வதற்கு அனுமதிப்பீர்களா? அனைத்து ஹிந்துக்களுமே தர்மப்படிதான் வாழ்வார்கள் என்று சொல்லிவிட முடியாது. சிறந்த பேச்சாளர்கள் எல்லோரும் சிறந்த மனிதர்கள் என்றும் சொல்லிவிட முடியாது. இவ்வாறு அந்த பெண் கூறியுள்ளார்.

மறுப்பு இல்லை

மறுப்பு இல்லை

இதையடுத்து, தேஸஜ்வி சூர்யா இன்னொரு எம்ஜே அக்பராக உருவாகுகிறாரா? என்று பாஜகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளது கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் தளம். இந்த குற்றச்சாட்டுகளை பாஜகவோ, தேஜஸ்வி சூர்யாவோ இதுவரை மறுக்கவில்லை.

குடும்ப அரசியல்

பிராமண சமூகத்தை சேர்ந்த தேஜஸ்வி சூர்யா, பசவனகுடி பாஜக எம்எல்ஏ ரவி சுப்பிரமணியாவின் உறவுக்காரர் ஆகும். மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சராக பதவி வகித்த எம்.ஜே.அக்பர், பாலியல் புகார்களால் பதவி விலகினார் என்பது நினைவிருக்கலாம்.

English summary
BJP candidate from Bangalore South Tejasvi Surya found himself at the centre of a controversy Wednesday after the Karnataka Congress attacked him, citing allegations of 'abuse' by a woman against him and questioned the saffron party about his choice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X