வேளாண்துறையேதான்.. ஜேடிஎஸ் குமாரசாமி அடம்! மத்திய அமைச்சர் பதவிக்கு மோதும் கர்நாடகா 'பாஜக தலை'கள்!
பெங்களூர்: மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தமக்கு வேளாண் துறை அமைச்சர் பதவி கொடுத்தே ஆக வேண்டும் என ஜேடிஎஸ் தலைவரும் கர்நாடகா முன்னாள் முதல்வருமான குமாரசாமி அடம்பிடிக்கிறாராம். இதேபோல கர்நாடகா பாஜக தலைவர்கள் பலரும் மத்திய அமைச்சராவதற்கு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனராம்.
லோக்சபா தேர்தலில் பெரும்பான்மைக்கான 272 இடங்களைப் பெற முடியாத பாஜக, கூட்டணி கட்சிகளை நம்பி புதிய ஆட்சியை அமைக்கிறது. 3-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராகிறார்.

பிரதமராக ஜூன் 8-ந் தேதி மோடி பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டார். பின்னர் ஜூன் 9-ந் தேதி என மாற்றப்பட்டது. ஆனாலும் தற்போது வரை மோடி எப்போது பதவியேற்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதற்கு காரணமே புதிய ஆட்சியில் கூட்டணி கட்சிகள் முக்கியமான கேபினட் அமைச்சர் பதவிகளை கேட்டு நெருக்கடி கொடுப்பதுதான் என்கின்றன டெல்லி தகவல்கள்.
இந்த நிலையில் பாஜக 17 இடங்களில் வென்று கவுரவமான வெற்றியை தந்த கர்நாடகாவுக்கு 3 மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜகவின் கூட்டணி கட்சியான ஜேடிஎஸ்-க்கு ஒரு அமைச்சர் பதவி உறுதியாகி இருக்கிறதாம். ஜேடிஎஸ் தலைவரும் மண்டியா எம்பியுமான குமாரசாமி, தாம் மத்திய அமைச்சராவது உறுதி என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அத்துடன், வேளாண் துறை அமைச்சர் பதவியைத்தான் தாம் எதிர்பார்க்கிறேன் என பகிரங்கமாகவும் தெரிவித்திருந்தார் குமாரசாமி.
குமாரசாமியைத் தவிர்த்து கர்நாடகாவின் பாஜக எம்பிக்கள் 17 பேரில் 2 பேருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பிரகலாத் ஜோஷி, முன்னாள் முதல்வர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், பசவராஜ் பொம்மை, ஷோபா கரந்தலாஜே ஆகியோர் மத்திய அமைச்சர் பதவி தங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர். இதற்கான லாபிகளிலும் தீவிரம் காட்டுகின்றனர். பிரகலாத் ஜோஷியும் ஷோபாவும் ஏற்கனவே மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள். இவர்களுடன் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா, மாஜி துணை முதல்வர் காரேஜாள் ஆகியோரும் மத்திய அமைச்சர் பதவியை எப்படியாவது பெற வேண்டும் என முனைப்பு காட்டுகின்றனராம்.
கர்நாடகாவில் ஜாதிதான் பிரதானம். இதனடிப்படையில் பிராமணர் பிரகலாத் ஜோஷி, ஒக்கலிக கவுடா குமாரசாமிக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதியாக கிடைக்கும். லிங்காயத் ஜாதியை சேர்ந்த பசவராஜ் பொம்மை அல்லது ராகவேந்திராவுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications