ஹிஜாப் வழக்கு குறித்து டுவிட்டர் பதிவு... நீதிபதியை விமர்சித்ததாக கன்னட நடிகர் கைது
பெங்களூர்: ஹிஜாப் தடையை எதிர்த்து மாணவிகள் தொடர்ந்த வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கும் நீதிபதி கிருஷ்ணா தீக்சித் குறித்து டுவிட்டரில் கேள்வி எழுப்பிய கன்னட நடிகரை போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகத்தில் மாணவர்களின் போராட்டத்தையொட்டி கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. கர்நாடக அரசும் பள்ளி, கல்லூரிகளில் சீருடை முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டது.
கல்லூரிகளில் ஹிஜாப் தடை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உடுப்பி மாவட்ட கல்லூரி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணா தீக்சித் விசாரித்தார். பிறகு விசாரணையை மூவர் பெஞ்சுக்கு மாற்றினார். இதையடுத்து தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதிகளான கிருஷ்ணா தீக்சித், காசி ஜாய்புனியா மொஹிதீன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகின்றனர்.

இடைக்கால உத்தரவு
விசாரணையின்போது ‛‛வழக்கு விசாரணை முடியும்வரை பள்ளி, கல்லூரிகளில் மதம்சார்ந்த ஆடைகளை அணியக்கூடாது'' என நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவிகள் ஹிஜாப் அகற்றி வகுப்புக்கு செல்கின்றனர். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வீட்டுக்கு செல்கின்றனர்.

2 ஆண்டுக்கு முந்தைய பதிவு
இந்நிலையில் தான் கர்நாடக நடிகர் ஒருவர் ஹிஜாப் வழக்கை விசாரிக்கும் நீதிபதி குறித்து டுவிட்டரில் பதிவிட்டு கைதாகி உள்ளார். அதன் விபரம் வருமாறு: கன்னட திரைப்பட நடிகர் சேத்தன் குமார் அஹிம்சா. இவர் நடிப்பதோடு, சமூக செயற்பாட்டாளராகவும் உள்ளார். இவர் கடந்த 2020 ஜூன் 7ல் ஒரு டுவிட்டர் பதிவு செய்திருந்தார். அதில், ‛‛கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீக்சித், கற்பழிப்பு தொடர்பான வழக்கில் ராகேசுக்கு முன்ஜாமின் வழங்கி உள்ளார். கற்பழிப்புக்கு பின் இந்திய பெண் தூங்குவது பொருத்தமற்றது. எப்படி ஒருவரால் இப்படி இருக்க முடியும் எனவும் கூறியுள்ளார். 21ம் நூற்றாண்டில் தீக்சித்தின் பெண் மீதான வெறுப்பை காட்டுகிறது'' என கூறியிருந்தார்.

புதிய டுவிட்டர் பதிவு
இந்த பதிவை தற்போது மேற்கொள்காட்டி ஹிஜாப் தடை வழக்கை விசாரிக்கும் நீதிபதி கிருஷ்ணா தீக்சித் குறித்து சேத்தன் குமார் அஹிம்சா கேள்வி எழுப்பியுள்ளார். அதில், ‛‛கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக உயர்நீதிமன்ற முடிவு குறித்து பதிவிட்டு இருந்தேன். அப்போது நீதிபதி கிருஷ்ணா தீக்சித் கற்பழிப்பு வழக்கு ஒன்றில் கவலையளிக்கும் வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். தற்போதும் அந்த நீதிபதி தான் அரசு பள்ளிகளில் ஹிஜாப்பை ஏற்று கொள்ளலாமா, வேண்டாமா என்பதை தீர்மானிக்க உள்ளார். இந்த விவகாரத்தில் அவருக்கு சரியான புரிதல் இருக்கிறதா? '' என குறிப்பிட்டு உள்ளார்.

கைது
இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர். இது விவாதமான நிலையில் சேஷாத்திரிபுரம் போலீசார் தாமாக முன்வந்து சேத்தன் குமார் அஹிம்சா மீது இருபிரிவுகளில் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். கைதான சேத்தன் குமார் அஹிம்சா மீது இந்திய தண்டனை சட்டம் 505 (2)ன்படி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கருத்து வெளியிடுதல், 504ன்படி வேண்டுமென்றே ஒருவரை அவமதித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications