‛‛நெற்றியில் குங்குமம் பூச முடியாது’’.. பூசாரியை தடுத்து நிறுத்திய சித்தராமையா.. வெடித்த சர்ச்சை
பெங்களூர்: பூஜைக்கு பிறகு நெற்றியில் குங்குமம் பூச சென்ற பூசாரியை கர்நாடகா முதல்வர் சித்தராமையா தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் பரவி வரும் நிலையில் பாஜகவினர் சித்தராமையாவை விமர்சிக்க தொடங்கி உள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கர்நாடகாவில் அதிக இடங்களை காங்கிரஸ் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறார்.

கர்நாடகாவை பொறுத்தவரை மொத்தம் 28 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் தற்போது பாஜகவுக்கு 25 எம்பிக்கள், காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிக்கு தலா ஒரு எம்பியும், சுயேச்சையாக ஒருவரும் எம்பியாக உள்ளனர்.
இந்நிலையில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 10க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் முனைப்பில் முதல்வர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் மாநில தலைவரும், துணை முதல்வருமான டிகே சிவக்குமார் செயல்பட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நலத்திட்டங்களை இருவரும் தொடங்கி வைத்து வருகின்றனர்.
அதன்படி கர்நாடகாவில் புதிதாக உதயமான விஜயநகர் மாவட்டத்தில் ஹம்பி உற்சவ விழாவை முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார். அதன்பிறகு அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள எஸ்பி அலுவலகத்தை திறந்து வைத்தார். எஸ்பி அலுவலகம் திறந்து வைத்து சித்தராமையா உள்ளே சென்ற நிலையில் அங்குள்ள சாமி படங்களுக்கு மலர்தூவி வணங்கினார்.
‛‛மத்திய அமைச்சருக்கு சீட் கொடுக்காதீங்க’’.. எடியூரப்பா மகன் காலில் விழுந்து கெஞ்சிய பாஜக எம்எல்ஏ
அதன்பிறகு பூசாரி சாமி படங்களுக்கு ஆரத்தி காண்பித்து அந்த தட்டை சித்தராமையாவிடம் காண்பித்தார். அவர் ரூ.500 நோட்டை எடுத்து காணிக்கையாக வழங்கினார். அதோடு ஆரத்தி தட்டில் எரிந்த தீபத்தை சித்தராமையா தொட்டு வணங்கினார். அதன்பிறகு பூசாரி ஆரத்தி தட்டில் இருந்து குங்குமத்தை எடுத்து சித்தராமையாவின் நெற்றியில் பூச முயன்றார். இந்த வேளையில் சித்தராமையா தனது கையை அசைத்து குங்குமம் பூச வேண்டாம் என சைகை செய்தார்.
இதை கவனித்தவுடன் பூசாரி சிரித்தபடி ஆரத்தி தட்டை அங்கேயே வைத்தார். இந்நிலையில் தான் நெற்றியில் குங்குமம் பூச வேண்டாம் என்று முதல்வர் சித்தராமையா சைகை காட்டிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே பாஜகவினர் அவரை வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இந்து விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
தேர்தலில் இடம்பெறும் இலவச அறிவிப்பு.. தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்.. கர்நாடகா ஹைகோர்ட் அதிரடி
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகத்தை காங்கிரஸ் தலைவர்கள் புறக்கணித்தனர். இப்போது சித்தராமையா குங்குமம் பூச மறுத்துள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக சித்தராமையா கடந்த வாரம் கோவிலுக்குள் செல்ல மறுப்பு தெரிவித்தது சர்சயைாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications