பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிப்போடுவது ஏன்? எம்எல்ஏக்களுக்கு குமாரசாமி எழுதிய முக்கிய லெட்டர்!

கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் தொடர்ந்து தள்ளிப்போடுவது ஏன் என்று முதல்வரும் மஜத தலைவருமான குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் தொடர்ந்து தள்ளிப்போடுவது ஏன் என்று முதல்வரும் மஜத தலைவருமான குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார்.

கர்நாடக அரசியலில் இன்று மிக முக்கியமான நாள். மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி சார்பாக கடந்த வருடம் பதவி ஏற்ற குமாரசாமி தலைமையிலான ஆட்சி இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க உள்ளது.

16 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ள நிலையில், இன்று குமாரசாமி தலைமையிலான ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் குமாரசாமி தற்போது காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்களுக்கும் தொண்டர்களுக்கும் பரபரப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அமித் ஷாவை வீழ்த்த புதிய அஸ்திரத்தை கையில் எடுத்த காங்கிரஸ்.. டி.கே சிவக்குமாரின் கடைசி நேர திட்டம் அமித் ஷாவை வீழ்த்த புதிய அஸ்திரத்தை கையில் எடுத்த காங்கிரஸ்.. டி.கே சிவக்குமாரின் கடைசி நேர திட்டம்

கடிதம்

கடிதம்

குமாரசாமி எழுதியுள்ள கடிதத்தில், அதிருப்தி எம்எல்ஏக்கள் எல்லோரும் மீண்டும் கூட்டணிக்கு வர வேண்டும். அவர்கள் வந்தால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார். நீங்கள் வாருங்கள், நாம் அமர்ந்து பேசலாம். உங்கள் பிரச்சனைகளை சொல்லுங்கள். நான் தீர்த்து வைக்கிறேன்.

தீய சக்தி

தீய சக்தி

நீங்கள் தீய சக்தியுடன் சேர வேண்டாம். ஆட்சியை கைப்பற்ற அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இந்திய ஜனநாயகத்தை குழைத்து, அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து ஆட்சியை பிடிப்பார்கள். அவர்களுடன் நீங்கள் சேர கூடாது.

காரணம் என்ன

காரணம் என்ன

நம்பிக்கை வாக்கெடுப்பை நாங்கள் தள்ளி போட்டுதான் வருகிறோம். இதற்கு காரணம் இருக்கிறது. நான் ஆட்சியில் இருக்க விரும்பவில்லை. பதவி ஆசை இல்லை எனக்கு. ஆனால் பாஜகவின் முகத்திரையை கிழிக்க வேண்டும். பாஜக எப்படி எல்லாம் எம்எல்ஏக்களை வாங்க முயற்சி செய்கிறது என்று உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டும்.

பாஜக எப்படி

பாஜக எப்படி

பாஜக எப்படி ஜனநாயகத்தை உடைக்கிறது. எப்படி எல்லாம் சட்டங்களை வளைக்கிறது என்று மக்களுக்கு இப்போது தெரிந்து இருக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அவர்களை எப்படி எல்லாம் கவிழ்க்க பார்க்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரிந்து இருக்கும்.

ஏன் வெளியே

ஏன் வெளியே

இதை வெளியே கொண்டு வர வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிப்போட்டு வருகிறேன். கர்நாடக அரசியலை படுகுழிக்கு பாஜக கொண்டு சென்றுவிட்டது. இந்திய அரசியலில் மிக மோசமான எடுத்துக்காட்டு ஒன்றை பாஜக இன்று முன் வைத்து உள்ளது, என்று குமாரசாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

English summary
Karnataka Floor Test: CM Kumaraswamy writes a letter to Congress and JDS MLAs to save the government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X