பள்ளியில் ஹிஜாப் அணிய அனுமதி இல்லை: கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அப்பீல்?
பெங்களூர்: கர்நாடகத்தில் ஹிஜாப் அணிய அனுமதி கேட்ட மனுக்கள் தள்ளுபடியான நிலையில், மாணவிகள் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.
Recommended Video
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபுரா அரசு பியூ கல்லூரிகயில் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு குடும் எதிர்ப்பு கிளம்பியது. ஹிஜாப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் வெடித்தன.
இதற்கிடையே ஹிஜாப் தடையை நீக்க வேண்டும் எனக்கூறி உடுப்பி மாவட்ட கல்லூரி மாணவிகள் பெங்களூரில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி கிருஷ்ண தீக்சித் விசாரித்தார். பிறகு மூவர் அமர்வுக்கு மாற்றினார். தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி அமர்வு வழக்கை பிப்ரவரி 10 முதல் விசாரிக்க துவங்கியது.

இடைக்கால உத்தரவு
மாணவர்கள் மத அடையாள ஆடைகள் அணிந்து வகுப்புக்கு செல்ல ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பிறகு தினமும் தொடர்ச்சியா வழக்கு விசாரணை நடந்தது. மாணவிகள் தரப்பு வக்கீல்கள், அரசு தரப்பு வக்கீல்கள் தங்களது வாதங்களை முன்வைத்தனர். இதையடுத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன.

சிபிஐ விசாரணை வேண்டும்
கர்நாடக ஐகோர்டில் 11வது நாளாக வழக்கு விசாரணை நடந்தபோது அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நவதகி தனது தரப்பு வாதத்தை நிறைவு செய்தார். அதன்பிறகு மாணவிகள் தரப்பு வக்கீல்கள் கூடுதல் வாதங்களை முன்வைத்தனர். புதிதாக தாக்கலான மனு சார்பில் வக்கீல் வக்கீல் சுபாஷ் ஜா ஆஜராகி வாதாடினார். ''ஹிஜாப்புக்காக இவ்வளவு பெரிய கலவரம் நடைபெற சாத்தியமில்லை. இந்த வழக்கில் வாதாட நாடு முழுவதும் மூத்த வக்கீல்களை நியமித்துள்ளனர். சிலருக்கு நிதி உதவி வருகிறது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடைபெற வேண்டும்'' என்றார்.

எழுத்து பூர்வமாக தாக்கல்
அதைத்தொடர்ந்து மனுதாரர்கள் சார்பில் மேலும் சில வக்கீல்கள் தங்களின் வாதத்தை எடுத்து வைக்க நீதிபதிகளிடம் அனுமதி கோரினர். அதற்கு தலைமை நீதிபதி, இந்த வழக்கில் நீங்கள் வாதிட விரும்பும் விஷயங்களை எழுத்து மூலமாக தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர். இதையடுத்து மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்தது.

தீர்ப்பு ஒத்திவைப்பு
இதைத்தொடர்ந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக நீதிபதிகள் கூறினர். இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பு உடனடியாக வழங்கப்படும் என நினைத்த நிலையில் 11 நாள் விசாரணைக்கு பிறகும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகள் முறையாக இயங்கின.

நீதிமன்ற தீர்ப்பு
இந்நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி தீர்ப்பு வழங்கினர். ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல எனக்கூறிய உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனக்கூறி கர்நாடக அரசின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.

மேல்முறையீடு
மேலும் ஹிஜாப் தடையை எதிர்க்கும், ஹிஜாப் அணிய அனுமதி கோரும் மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து மாணவிகள் தரப்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் 6 மாணவிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications