சாவர்க்கர் பேனரை அகற்றக்கோரி போராட்டம்.. கர்நாடகாவில் பதற்றம்.. சிவமொக்காவில் 144 தடை உத்தரவு அமல்!
சிமோகா: சுதந்திர தினத்தன்று ஆர்எஸ்எஸ் இயக்க நிறுவனர் சாவர்க்கருக்கு இந்து ஆதரவு அமைப்புகளால் அமைக்கப்பட்ட பேனருக்கு இஸ்லாமிய இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆசாதி கா அம்ரித் மகா உத்சவ் என்ற பெயரில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி பொதுமக்கள் தங்கள் வீட்டின் முன்போ அல்லது மொட்டை மாடியிலோ இரவு, பகல் என வித்தியாசம் பாராமல் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசியக் கொடியை ஏற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் வீடுதோறும் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. நாடு முழுவதும் காலை முதலே சுதந்திர தினம் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சாவர்க்கருக்கு பேனர்
அதேபோல் பல்வேறு பகுதிகளிலும் இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் நினைவுகளும் போற்றப்பட்டு வருகிறது. அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், பல்வேறு தரப்பினரும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு போஸ்டர் மற்றும் பேனர்கள் அமைத்துள்ளனர். அந்த வகையில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிறுவனரான சாவர்க்கருக்கும் கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதேபோல் சிமோகாவிலும் இந்து ஆதரவு அமைப்புகளால் போஸ்டர் மற்றும் பேனர் வைக்கப்பட்டுள்ளன.

144 தடை
இதனைத்தொடர்ந்து சாவர்க்கர் பேனரை அகற்றக்கோரி இஸ்லாமியர் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு இந்து ஆதரவு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் காரணமாக பதற்றம் அதிகரித்ததால், சிமோகாவின் பல்வேறு பகுதிகளிலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

பேனர் அகற்றம்
இதேபோல் மங்களூரு மாவட்டத்தின் சூரத்கல் பகுதியிலும் சாவர்க்கருக்கு பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, சாவர்க்கருக்கு வைக்கப்பட்ட பேனர் அகற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே பாஜக எம்எல்ஏ பரத் ஷெட்டியின் கோரிக்கையின் பேரில், சூரத்கல் பகுதிக்கு சாவர்க்கர் பெயரைச் சூட்டுவதற்கான முன்மொழிவுக்கு மங்களூரு மாநகராட்சி ஒப்புதல் அளித்தது. ஆனால் இதுவரை அரசு அனுமதி வழங்காததால், பெயர் மாற்றப்படாமல் உள்ளது.
Recommended Video

திப்பு சுல்தான் பேனர் கிழிப்பு
ஏற்கனவே பெங்களூரு நகரின் முக்கியப் பகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பாக திப்பு சுல்தானுக்கு வைக்கப்பட்ட பேனர் கிழிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்து ஆதரவு அமைப்புகளால் சாவர்க்கருக்கு வைக்கப்பட்ட பேனருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட்












Click it and Unblock the Notifications