அய்யயோ எனக்கு செய்வினை வெச்சுட்டாங்க..4.5 அடி குழியில் விழுந்துட்டேன்.. கர்நாடகா பாஜக சோமண்ணா பகீர்!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது தமக்கு யாரோ செய்வினை செய்து வைத்துவிட்டதாகவும் தாமே 4.5 அடி குழிவெட்டி விழுந்துவிட்டதாகவும் அம்மாநில பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சோமண்ணா பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிந்து 9 மாதங்களாகிவிட்டது. இன்னமும் கர்நாடகா பாஜக தலைவர்கள் தேர்தல் தோல்வி அதிர்ச்சியில் இருந்து மீள முடியாதவர்களாக உள்ளனர்.

கர்நாடகா சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பின்னர் மாநில பாஜக தலைவர் பதவி யாருக்கு என்பதில் பெரும் மல்யுத்தம் நடந்தது. இதில் முன்னாள் முதல்வ எடியூரப்பா தன் மகன் விஜயேந்திராவை ஜெயிக்க வைத்தார். இதனால் இலவு காத்த கிளிகளாக இருந்த மாஜி அமைச்சர் சோமண்ணா உள்ளிட்டோர் புலம்பிக் கொண்டே இருக்கின்றனர்.
காங்கிரஸுக்கு தாவல்?: ஒரு கட்டத்தில் சோமண்ணா, 5 பாஜக எம்.எல்.ஏக்களுடன் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸுக்கு ஓடிப் போய்விடுவார் எனவும் கூறப்பட்டது. ஆனால் 5 மாநில சட்டசபை தேர்தல்களில் 4 மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனால் காங்கிரஸுக்கு ஓடிப் போக திட்டமிட்ட பாஜக தலைவர்கள் அப்படியே அமைதி காத்து வருகின்றனர்.
செய்வினை வெச்சுட்டாங்க.. : இந்த நிலையில் கர்நாடகா தேர்தலில் தோல்வி அடைந்த மூத்த பாஜக தலைவர் சோமண்ணா பெங்களூரில் நேற்ரு செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது சோமண்ணா கூறியதாவது: பாஜகவில் அநீதி இழைக்கப்படுகிறது. நானே போய் 4.5 அடிகுழி வெட்டி விழுந்துவிட்டேன். கோவிந்தராஜ் நகர் சட்டசபை தொகுதியை நான் யாருக்காகவும் விட்டு கொடுத்திருக்கவே கூடாது. ஆனால் எனக்கு அப்போது யாரோ செய்வினை செய்து வைத்துவிட்டதால் அப்படி ஒரு முடிவை எடுக்கவும் நேரிட்டது.
டெல்லி விசிட்: டெல்லிக்கு போய் பாஜக தலைவர்களை சந்திக்க இருக்கிறேன். டெல்லியில் வரும் 9-ந் தேதி பாஜக தலைவர்களை சந்திக்கும் போது கர்நாடகா பாஜக தலைவர்கள் என்னை டார்கெட் செய்வதையே வழக்கமாக வைத்திருக்கும் போக்கை கைவிட வலியுறுத்துவேன். இதன்பின்னர் அனைத்தும் சுமூகமான நிலைமைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கிறேன். லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டும் என கட்சி மேலிடம் கட்டளையிட்டால் அதையும் கூட செய்ய தயாராகவே இருக்கிறேன். இவ்வாறு சோமண்ணா தெரிவித்தார்.
-
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்!












Click it and Unblock the Notifications