"மாதம் ரூ.90,000.." வாயை பிளக்க வைக்கும் பானி பூரி வியாபாரியின் வருவாய்.. விவாதமான வீடியோ
பெங்களூர்: கர்நாடகாவில் பானி பூரி விற்பனை செய்தே ஒருவர் நம்மில் பலரையும் விட அதிகமாக வருவாய் பார்க்கிறார். மாலை 4 மணி முதல் இரவு வரை மட்டுமே இந்த கடை செயல்படும் சூழலில், இதில் இருந்து அவர் மாதம் ₹90,000, அதாவது ஆண்டுக்கு ₹10.8 லட்சம் சம்பாதிப்பதாகச் சொல்கிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீட் புட்களில் பானி பூரி உள்ளது. மொறுமொறுப்பான பூரி, சுவையான மசாலா மற்றும் புளிப்பு கலந்த பானி என இது அனைவரையும் கவரும். நமது நாட்டில் நீங்கள் எந்தவொரு ஊருக்குப் போனாலும் குறைந்தது ஓரிரு பானி பூரி கடைகளையாவது உங்களால் பார்க்க முடியும். அந்தளவுக்கு நமது நாட்டில் பானி பூரி பேமஸ் ஆகிவிட்டது.

பானி பூரி
இதற்கிடையே பானி பூரி வியாபாரம் தொடர்பாக வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் அந்த ஒரு பானி பூரி வியாபாரி தான் மாதம் ₹90,000, அதாவது ஆண்டுக்கு ₹10.8 லட்சம் சம்பாதிப்பதாகச் சொல்கிறார். இந்த வீடியோ இணையத்தில் பெரும் வியப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தள பிரபலமான கேசி பெரைரா (Cassy Pareira) இது தொடர்பான வீடிோயவை பகிர்ந்துள்ளார்.
அதில் தினசரி பானிபூரி வியாபாரி என்னவெல்லாம் செய்கிறார் என்பது காட்டப்பட்டது. அந்த கடையில் தினமும் 80 முதல் 100 பிளேட் வரை பானி பூரி விற்பனையாகிறது. அதாவது சராசரியாக ₹3,000 தினசரி வருவாய் கிடைக்கும் என அவர் குறிப்பிடுகிறார்.. வீடியோவில் கேசி பெரைரா சொந்தமாக பானி பூரி தயாரிக்கவும் கற்றுக்கொண்டார்.
வீடியோ
இது தொடர்பாக அவர், "உருளைக்கிழங்கு உரித்து, வெங்காயம் நறுக்கும்போது முதலில் கொஞ்சம் பதட்டமாக இருந்தது உண்மை. ஆனால், போகப்போகப் பழகிவிட்டது," என்றார். வெறுமன பானி பூரியை சும்மா எடுத்துக் கொடுப்பது மட்டுமின்றி, முறையாக அதைச் செய்து பிளேட்டில் வைத்துக் கொடுப்பது வரை அனைத்தையும் கேசி செய்திருந்தார். அதை வீடியோவாக எடுத்துப் பதிவிட்டுள்ளார்.
வருவாய்
இந்த கடை தினமும் மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதில் தான் தினசரி 100 பிளேட்களை வரை விற்பனையாகும் சூழலில், இதன் மூலம் தினசரி 3 ஆயிரம் ரூபாய், அதாவது மாதம் ரூ.90,000 வரை வருமானம் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டிருந்தார். அவரது இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
நெட்டிசன்கள்
இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை கமெண்ட் செய்து வருகிறார்கள். அதில் ஒருவர், "பி.காம் (B.Com) படித்தவரை விட எந்த கடைக்காரரும் அதிகம் சம்பாதிக்கலாம். இப்போது பி.காம் ஒரு பயனற்ற பட்டமாகிவிட்டது" என எழுதினார். அதேசமயம் மற்றொருவர், "இதில் ஆச்சரியமில்லை. தரமான சேவை அளித்தால் ஹோட்டல்களும் பெரும் லாபம் ஈட்டும் தொழிலாகவே இருக்கிறது. நேர்மையும் கடின உழைப்பும் ஒரு தொழிலில் இருந்தால், மாத சம்பளதாததரை விட பிஸ்னஸ் செய்து அதிகம் சம்பாதிக்க முடியும். ஆனால், நேர்மையும் கடின உழைப்புமே இதற்குத் தேவை" என்றார்
அதேநேரம் இன்னும் சிலர் இந்த ரூ.90,000 என்பது வருவாய் தானே தவிர லாபம் இல்லை என்தை சுட்டிக்காட்டினர். பொருள் வாங்க ஆகும் செலவு, வாடகை எனப் பல விஷயங்களை இதில் கருத்தில் கொள்ள வேண்டும் என்றனர். மேலும், படித்து வேலைக்குச் சேரும்போது எளிதாக அப்ஸ்கில் செய்து கொள்ள முடியும். ஆனால், பானி பூரியில் அதற்கான வாய்ப்பு குறைவு என்றும் குறிப்பிடுகிறார்கள்
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications