பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹெல்மெட் அணியாததால் அபராதம்.. ஆதாரம் கேட்ட நபர்.. பெங்களூர் போலீஸ் செய்த ‛தக்லைப்’..பரவும் போட்டோ

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூர் நகரில் கண்காணிப்பு கேமரா மூலம் ஹெல்மெட் அணியாததை கண்டுபிடித்து ஆன்லைன் செல்லான் முறையில் அபராதம் விதிக்கப்பட்ட நிலையில் ஆதாரம் கேட்ட வாலிபருக்கு மாநகர போலீசார் கொடுத்த ரிப்ளை தக்லைப் சம்பவம் போல் மாறியுள்ளது. இதுதொடர்பான போட்டோ தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது.

இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் பெங்களூர் ஒன்றாக உள்ளது. இங்கு முன்னணி ஐடி நிறுவனங்கள் இயங்கி வருவது தான் இதற்கு முக்கிய காரணமாகும்.

மேலும் பிற மாநிலங்களில் இருந்து பெங்களூருக்கு வேலை தேடி செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பெங்களூரின் மக்கள் தொகை என்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

வந்தாச்சு வந்தே பாரத் ரயில்.. சென்னை- பெங்களூர்- மைசூர் இடையே நவம்பர் 10 முதல் சீறிப்பாய்கிறது வந்தாச்சு வந்தே பாரத் ரயில்.. சென்னை- பெங்களூர்- மைசூர் இடையே நவம்பர் 10 முதல் சீறிப்பாய்கிறது

 போக்குவரத்து பிரச்சனை

போக்குவரத்து பிரச்சனை

இது ஒருபுறம் இருக்க மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் நகரின் முக்கிய ரோடுகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் உள்ளன. இதனை சரிசெய்வது என்பது பெரும் சவாலாக உள்ளது. மேலும் தற்போதைய சூழலில் அதிகப்படியான போக்குவரத்து போலீசார் தேவையாகும். இதனால் தான் நகரில் போக்குவரத்தை சீர்செய்ய தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் இல்லாத நேரத்திலும் தானியங்கி முறையில் இந்த சிக்னல்கள் இயங்கி போக்குவரத்தை சீர் செய்து வருகிறது.

விதிமீறினால் அபராதம்

விதிமீறினால் அபராதம்

மேலும் போக்குவரத்து விதிகளை மீறும் நபர்களை கண்காணிக்க 360 டிகிரி சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றனர். இந்த கண்காணிப்பு கேமராக்கள் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை படம்பிடித்து போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். அங்குள்ள அதிகாரிகள் வாகன பதிவெண்களின் அடிப்படையில் எந்த வகையான விதிமீறல் என்பதை பார்த்து அபராதம் விதித்து வருகின்றனர்.. இது பெங்களூர் மட்டுமின்றி பல்வேறு முக்கிய நகரங்களில் பொதுவான நடைமுறையாக உள்ளது.

ஹெல்மெட் அணியவில்லை என அபராதம்

ஹெல்மெட் அணியவில்லை என அபராதம்

இந்நிலையில் தான் பெங்களூர் உல்லசப்பா சந்திப்பில் கடந்த 2ம் தேதி ஒருவர் ஸ்கூட்டியில் ஹெல்மெட் அணியாமல் ஒருவர் பயணித்தார். இதையடுத்து ஆன்லைன் செல்லான் முறையில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தான் பெலிக்ஸ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த செல்லானை பகிர்ந்தார். மேலும் பெங்களூர் மாநகர போக்குவரத்து போலீஸ் மற்றும் மாநகர போலீஸ் ஆகியவற்றின் ட்விட்டர் ஐடியை டேக் செய்து பதிவு ஒன்று செய்தார்.

 ஆதாரத்தை தாங்க..

ஆதாரத்தை தாங்க..

அதில் பெலிக்ஸ் ராஜ், ‛‛ஹெல்மெட் அணியவில்லை என உரிய ஆதாரங்கள் இன்றி கூறப்பட்டுள்ளது. தயவு செய்து இதுதொடர்பான படத்தை ஆதாரமாக காட்ட வேண்டும். இல்லாவிட்டால் வழக்கை நீக்க வேண்டும். இதற்கு முன்பும் இதேபோல் ஆதாரமற்ற குற்றச்சாட்டால் நான் அபராதம் செலுத்தினேன். இதனால் மீண்டும் அபராதம் செலுத்த மாட்டேன்'' என கூறியிருந்தார்.

போலீஸ் செய்த சம்பவம்

போலீஸ் செய்த சம்பவம்

இதனை பார்த்த பெங்களூர் மாநகர போக்குவரத்து போலீசார் ரிப்ளை செய்தனர் அதாவது ஹெல்மெட் இன்றி ஸ்கூட்டரில் பயணித்த நபரின் படத்தை ஆதாரமாக பெலிக்ஸ் ராஜ் ஐடியை டேக் செய்து வெளியிட்டனர். இதை பார்ந்த பெலிக்ஸ் ராஜ், ‛‛ஆதாரத்துக்கு நன்றி. பொதுமக்களாகிய ஒவ்வொருவருக்கும் இதனை கேட்க உரிமை உண்டு. பெங்களூர் மாநகர போக்குவரத்து போலீசாரை பாராட்டுகிறனே். நான் அபராதம் செலுத்துகிறேன்'' என கூறியுள்ளார்.

‛தக்லைப்’ என பாராட்டு

‛தக்லைப்’ என பாராட்டு

இதனை பார்த்த நெட்டிசன்கள் தற்போது இந்த சம்பவம் தொடர்பான கருத்து பரிமாற்றம் தொடர்பான விஷயங்களை ஸ்கீரின்ஷாட் எடுத்து மீம் போன்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த விஷயத்தில் பலரும் பெங்களூர் போலீசார் தக்லைப் செய்ததாக கூறி கருத்துகளை கூறி வருகின்றனர். இது தற்போது இணையதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

English summary
The replay given by the city police to a teenager who was found not wearing a helmet by a surveillance camera in Bangalore and was fined through online challan has turned out to be like a Taklai incident. The related photo is currently circulating on the internet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X