காவிமயமாகும் அரசுப்பள்ளி வகுப்பறைகள்..கர்நாடகாவில் வெடித்த புதிய சர்ச்சை..காங்கிரசுக்கு பாஜக பதிலடி
பெங்களூரு: கர்நாடகாவில் அரசு பள்ளிகளின் வகுப்பறைகளுக்கு காவி வண்ணம் பூசப்படும் விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கல்வித்துறையை காவிமயாமாக்கும் முயற்சி என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசு இந்துத்வா கொள்கைகளை திணிக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
அதேபோல், கல்வித்துறையையும் காவி மயமாக்கும் முயற்சியில் கர்நாடக ஆளும் பாஜக அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது.

8 ஆயிரம் வகுப்பறைகள்
இந்த நிலையில், அரசு பள்ளிகளுக்கு காவி வண்ணம் பூசப்படுவதாக கர்நாடகாவில் புது சர்ச்சை வெடித்துள்ளது. கர்நாடகாவில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கல்பர்க்கி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவேகா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் படி கர்நாடக மாநிலம் முழுவதும் அரசுப்பள்ளிகளில் 8 ஆயிரம் வகுப்பறைகள் கட்ட திட்டமிட்டுள்ளது.

காங்கிரஸ் விமர்சிப்பு
இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும் வகுப்பறைகளுக்கு காவி வர்ணம் பூசப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பது புதிய சர்ச்சைக்கு வித்திட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசை விமர்சித்துள்ளனர். கல்வித்துறை காவியமாக்கும் முயற்சி என்று விமர்சித்து வருகின்றன. இது தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் பிகே ஹரிபிரசாத் கூறுகையில், அரசு பள்ளிகளும், கல்லூரிகளும் வரிசெலுத்துபவர்களின் பணத்தில் இருந்து நடத்தப்படுகிறது.

இதை ஏற்றுக்கொள்ள முடியாது
எனவே இதை ஒரு மதத்திற்குள் வைப்பது எந்த வேலையும் இல்லை. மாநிலத்தின் கல்வியை வகுப்புவதாமாக்க கல்வித்துறை அமைச்சர் முயற்சிக்கிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார். ஆனால், இதற்கு பதிலடி கொடுத்துள்ள கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியதாவது:- கர்நாடகத்தில் பள்ளி கட்டிடங்களுக்கு காவி வண்ணம் பூசப்படுகிறது. இதை காங்கிரஸ் கட்சி விமர்சிக்கிறது.

விவேகானந்தர் காவி உடைதான் உடுத்தியிருந்தார்
காங்கிரஸ் கட்சிக்கு அனைத்திலும் அரசியல் செய்வதுதான் வாடிக்கை. காவி வண்னம் நமது தேசியக் கொடியில் உள்ளது. காவியைக் கண்டால் காங்கிரஸ் கொந்தளிப்பது ஏன்? விவேகானந்தர் பெயரில் பள்ளியில் கட்டிடங்களை அமைக்கிறோம். விவேகானந்தர் சன்னியாசியாக இருந்தவர். அவர் காவி உடைதான் உடுத்தி இருந்தார். விவேகம் என்றால் அனைவருக்கும் அறிவு என்பதே ஒருபொருள். காங்கிரஸ் கட்சியினர் முதலில் இதை கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.
-
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications