சர்வதேச அளவில் தலைகுனிவு.. சிங்கப்பூர் டிவி சேனலில் பாஜக கூட்டணி எம்.பி. பிரஜ்வல் களியாட்ட செய்தி
பெங்களூர்: கர்நாடகாவின் ஹாசன் எம்பியான பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தற்போது பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு சென்றுள்ள நிலையில் சிங்கப்பூர் வரை ஆபாச வீடியோ மேட்டர் சென்றுள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜேடிஎஸ் கட்சியில் அவரது பேரன் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகா மாநிலம் ஹாசன் எம்பியாக உள்ளார். கர்நாடகாவில் பாஜக + ஜேடிஎஸ் கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலை எதிர்கொண்டுள்ளது. மீண்டும் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக ஜேடிஎஸ் சார்பில் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிட்டுள்ளார்.

இந்த தொகுதிக்கு கடந்த மாதம் 26ம் தேதி தேர்தல் நடந்தது. ஆனால் தேர்தலுக்கு முந்தைய நாள் பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரவ தொடங்கியது. இதையடுத்து தேர்தல் முடிந்த பிறகு பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனி புறப்பட்டு சென்றார்.
இந்த விவகாரம் தற்போது அரசியலில் பிரளயத்தை கிளப்பி உள்ளது. சுமார் 300 பெண்களுடன், பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தொல்லை கொடுத்து சுமார் 3 ஆயிரம் வீடியோக்களை எடுத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் கர்நாடகா முதல்வர் சித்தராமையா எஸ்ஐடி எனும் சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ளார். இந்த குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும் முன்னாள் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரஜ்வல் மற்றும் அவரது தந்தை ரேவண்ணா எம்எல்ஏ ஆகியோர் மீது பதியப்பட்ட வழக்கில் எஸ்ஐடி விசாரணைக்கு அழைத்து நோட்டீஸ் வழங்கி உள்ளது.
இதற்கிடையே தான் இந்த விவகாரம் சிங்கப்பூர் வரை சென்றுள்ளது. அதாவது சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு சிஎன்ஏ எனும் ஆங்கில செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் தொலைக்காட்சியில் பிரஜ்வெல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ தொடர்பான செய்தி விரிவாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ‛India Votes' என்ற பெயரில் லோக்சபா தேர்தல் 2024 தொடர்பான செய்திகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகிறது.
இதில் முதல் செய்தியாக பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ செய்தி இடம்பெற்றுள்ளது. இந்தியாவை ஆட்சி செய்யும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணியில் உள்ள ஜேடிஎஸ் வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் எம்பியாக உள்ளார். அவர் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் ஆவார். பிரஜ்வல் ரேவண்ணா மீண்டும் ஹாசன் தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவர் பெண்களுடன் சேர்ந்து இருக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா மட்டுமின்றி ஜேடிஎஸ் எம்எல்ஏவாக உள்ள அவரது தந்தை ரேவண்ணா மீதும் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரஜ்வல் தற்போது ஜெர்மனி தப்பித்து சென்றுள்ளதாக கூறப்படும் நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் அரசு இந்த விவகாரம் குறித்து எஸ்ஐடி விசாரணை நடத்தி வருகிறது. தற்போது லோக்சபா தேர்தல் நடந்து வரும் நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் விவாதத்தை கிளப்பி உள்ளது என செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேனலில் வெளியான செய்தியின் வீடியோ கிளீப்புகள் தற்போது வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை சுட்டிக்காட்டி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பாஜகவையும், பிரதமர் மோடியையும் விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர். இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரோகிணி ஆனந்த் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‛‛சிங்கப்பூர் சர்வதேச மீடியா பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள பிரஜ்வல் ரேவண்ணாவின் செய்தியை வெளியிட்டுள்ளது. இது மோடியின் குடும்பத்துக்கு சர்வதேச அளவிலான இன்னொரு வெட்கக்கேடான விஷயமாகும்'' என தெரிவித்துள்ளார். அதாவது கர்நாடகா லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் உள்ளதால் காங்கிரஸ் கட்சியின் ரோகிணி ஆனந்த் இப்படி பதிவிட்டுள்ளார்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications