பெங்களூருவுக்கு குட்பை.. ஆர்சிபி அணி இனி சின்னச்சாமி மைதானத்தில் விளையாடாது! ஹோம் கிரவுண்ட் மாற்றம்
பெங்களூர்: ஐபிஎல்லில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி இந்த முறை பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் விளையாடும் வாய்ப்பு குறைவு என்ற தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்துக்கு பதில் ஆர்சிபி அணியின் ஹோம் கிரவுண்ட்டாக ராய்ப்பூர் அல்லது இந்தூர் மாறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
நடப்பு ஐபிஎல் சாம்பியனாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி உள்ளது. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற மறுநாள் பெங்களூரில் வெற்றி கொண்டாட்டம் நடத்தப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் பலியாகினர். இதையடுத்து பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படவில்லை.

ஓய்வு பெற்ற கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அரசுக்கு அளித்த அறிக்கையில் பெங்களூர் மைதானத்தில் ஏற்பட்ட இடநெருக்கடி தான் 11 பேர் பலியாக முக்கிய காரணம் என்று கூறினார். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி சின்னச்சாமி மைதானத்தில் இருந்து நவி மும்பைக்கு மாற்றப்பட்டது. அதேபோல் விஜய் ஹசாரோ போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடினார். ஆந்திர அணிக்கு எதிராக கடந்த மாதம் 24ம் தேதி டெல்லி அணி விளையாடியது. இந்த போட்டி சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது.
இதனால் வரும் ஐபிஎல் போட்டியில் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் ஆர்சிபி அணி விளையாடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த முறை ஐபிஎல் போட்டி மார்ச் மாதம் 20ம் தேதிக்கு பிறகாக ஐபிஎல் போட்டி தொடங்க உள்ளது. இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் ஆர்சிபி அணி விளையாடும் வாய்ப்பு மிகவும் குறைவு என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல் போட்டி நெருங்கி வரும் நிலையில் தற்போது வரை கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் போட்டிகளை பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் நடத்துவதற்கு ஆர்வம் காட்டவில்லை.
அதற்கு பதிலாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் அல்லது மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் கிரிக்கெட் மைதானத்தை ஆர்சிபி பணியின் ‛ஹோம் கிரவுண்ட்' ஆக மாற்ற திட்டமிட்டுள்ளது. இதில் ராய்ப்பூர் முதல் ஆப்ஷனாகவும், இந்தூர் 2வது ஆப்ஷனாகவும் உள்ளது.
அதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தனது ஹோம் கிரவுண்ட்டை மாற்ற திட்டமிட்டுள்ளது. ராஜஸ்தான் அணியின் ஹோம் கிரவுண்ட்டாக ஜெய்ப்பூர் இருக்கும். ஆனால் தற்போது ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தில் சில பிரச்சனைகள் செல்கிறது. இதனால் போட்டியை ஜெய்ப்பூரில் இருந்து புனேவுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
-
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
கரப்பான் பூச்சி கட்சியுடன் கைகோர்க்கும் பிரகாஷ் ராஜ்! கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ்! பெங்களூரில் ஷாக் -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி












Click it and Unblock the Notifications