பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2021 டிசம்பரில் நிலவுக்கு இந்தியரை அனுப்ப தீவிரம்.. இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

Google Oneindia Tamil News

பெங்களூரு: 2021 டிசம்பரில் நிலவுக்கு இந்தியரை அனுப்புவோம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

டெல்லியில் கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதியன்று பிரதமர் மோடி சுதந்திர தின உரையாற்றினார். அதில், 2022-ம் ஆண்டு இறுதிக்குள் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார். தன் தொடர்ச்சியாக, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, இத்திட்டத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

2004-ம் ஆண்டு முதலா கவே ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதற்கு பல்வேறு கட்ட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது அந்த திட்டம் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. திட்டத்துக் கான மதிப்பீட்டினை மத்திய அரசிடம் இஸ்ரோ அண்மையில் சமர்ப்பித்தது.

நிதி ஒதுக்கீடு

நிதி ஒதுக்கீடு

அதன்படி, இத்திட்டத்துக்கு ஆகும் மொத்த செலவான ரூ.10 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையும் அண்மையில் ஒப்புதல் அளித்தது. ககன்யான் திட்டத்தின் கீழ், 3 பேர் விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளனர்.

சோதனை முயற்சி

சோதனை முயற்சி

அதற்கு ஜிஎஸ்எல்வி மார்க் -3 என்ற ராக்கெட் பயன்படுத்தப்படவுள்ளது. ககன்யான் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு, 2 முறை ஆளில்லா விண்கலங்கள் பரிசோதனை முயற்சியாக விண்ணில் செலுத்தப்படும் என்று ஏற்கனவே இஸ்ரோ தெரிவித்திருந்தது.

பேட்டியளித்த இஸ்ரோ சிவன்

பேட்டியளித்த இஸ்ரோ சிவன்

இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோ சிவன், 2021 டிசம்பரில் நிலவுக்கு இந்தியரை அனுப்புவோம் என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:விண்வெளிக்கு இந்தியரை அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நிலவுக்கு விண்கலம்

நிலவுக்கு விண்கலம்

2020 டிசம்பர், 2021 ஜூலையில் ஆளில்லாத விண்கலம் நிலவுக்கு அனுப்பப்படும். இஸ்ரோவின் சார்பில் 2018 ல் 17 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2018ம் ஆண்டில் 2 ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் விண்ணில் ஏவுப்பட்டுள்ளன.

நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணி

நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணி

நிலவுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்ட பணிகள் நடந்து வருகிறது. இது இஸ்ரோவின் மிகப் பெரிய திருப்பு முனை திட்டமாகும். 2020 டிசம்பர் மற்றும் 2021 ஜூலை மாதங்கள் 2 ஆளில்லா விண்கலங்கள் விண்ணிற்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டிசம்பரில் அனுப்ப திட்டம்

டிசம்பரில் அனுப்ப திட்டம்

இதே போன்று 2021 டிசம்பரில் ஆட்களை சுமந்து செல்லும் விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. ககன்யான் திட்டத்தின் ஆரம்ப கட்ட பயிற்சி இந்தியாவிலும், உயர்மட்ட பயிற்சிகள் ரஷ்யாவிலும் அளிக்கப்படும். பயிற்சி குழுவில் பெண் விண்வெளி ஆய்வாளர்களும் இடம்பெற உள்ளனர் என்று அவர் கூறினார்.

English summary
The target for a manned mission is December 2021, ISRO chief K Sivan, said in bengaluru today. The target for the first unmanned mission is December 2020 and for the second unmanned mission is July 2021 he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X