பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஐயோ.. வர்றாங்களா.. அலறி அடித்து கொண்டு.. வீடுகளையும் பூட்டி.. காட்டுக்குள் ஓடும் மக்கள்.. என்னாச்சு?

தடுப்பூசிக்கு பயந்து ஓடுகிறார்கள் கர்நாடக பழங்குடி கிராம மக்கள்

Google Oneindia Tamil News

பெங்களூரு: அவங்க வர்றாங்கன்னு தெரிஞ்சாலே போதும்.. அலறி அடித்து கொண்டு.. தங்கள் வீடுகளையும் பூட்டிக் கொண்டு, பக்கத்தில் இருக்கிற காட்டுக்குள் ஓடி ஒளிந்து கொள்வார்கள் கிராம மக்கள்.. என்ன காரணம்? யார் இவர்கள்?!

கர்நாடகத்தில் தொற்று அதிகமாக உள்ளது.. அதனால் மற்ற மாநிலங்களைவிட இங்குதான் உடனடியாக லாக்டவுன் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து கட்டுப்பாடுகள் உள்ளன.

அதேசமயம், தடுப்பூசிகளை செலுத்துவதில் அம்மாநில அரசு பெரும் முனைப்பு காட்டி வருகிறது.. ஆனால், நிறைய கிராமங்களில் இந்த தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுகள் இல்லாததால், ஆர்வம் காட்டாமல் உள்ளனர்..

தடுப்பூசி போட்டாதான் இனி கல்யாணத்திற்கு பெண் கிடைக்கும் போலயே - விளம்பரத்தால் கதிகலங்கும் இளைஞர்கள் தடுப்பூசி போட்டாதான் இனி கல்யாணத்திற்கு பெண் கிடைக்கும் போலயே - விளம்பரத்தால் கதிகலங்கும் இளைஞர்கள்

 பழங்குடியினர்

பழங்குடியினர்

அதனால், அந்தந்த மாவட்ட நிர்வாகம், கிராமம் கிராமமாக சென்று 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி குறித்து எடுத்துரைத்து, ஊசியை போட்டுக் கொள்ளும்படி வலியுறுத்தி வருகிறது. அப்படித்தான், சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனூர் தாலுகாவில் ஹாவினமூலே என்ற கிராமம் உள்ளது.. இங்கு வசிப்பவர்கள் மலைவாழ் மக்கள் ஆவார்.. இந்த கிராமத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 190 பேர் இருக்கிறார்கள்.. ஆனால், இவர்கள் எல்லாருமே தடுப்பூசி என்ற பெயரை சொன்னாலே பயப்படுகிறார்கள்.

 சுகாதாரத்துறை

சுகாதாரத்துறை

சில நாட்களாகவே இந்த கிராமத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட 190 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போட சுகாதார துறையினர் சென்றிருக்கிறார்கள்.. சுகாதார துறை அதிகாரிகள் வரப்போகிறார்கள் என்று முன்கூட்டியே தண்டோரா மூலம் கிராமத்தினருக்கு சொல்வது வழக்கம்.. அப்படித்தான் தண்டோரா போட்டுள்ளனர்.. அதிகாரிகள் டெஸ்ட் செய்ய வருகிறார்கள்.. கொரோனா தடுப்பூசியும் போடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

காட்டுப்பகுதி

காட்டுப்பகுதி

அவ்வளவுதான்.. கிராம மக்கள் எல்லாருமே பயந்துகொண்டு, வீடுகளையும் பூட்டிக் கொண்டு, பக்கத்தில் இருக்கும் காட்டுப்பகுதிக்கு அலறி ஓடிவிட்டனர்.. குடும்பத்துடன் அங்கே பல நேரமாக, பதுங்கியே இருந்துள்ளனர்.. கிராமத்திற்கு வந்த சுகாதார துறையினர், அங்கு ஒருத்தரும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து திரும்பி சென்றுவிட்டனர்.

வீடுகள்

வீடுகள்

இதேபோல, 2 நாளுக்கு முன்பும் சுகாதார துறையினர் சென்றிருக்கிறார்கள்.. அப்போதும், மக்கள் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஓடிவிட்டனர். கிராமமே வெறிச்சோடி இருந்தது.. ஒவ்வொரு தெருவாக சென்று, மக்களை அதிகாரிகள் தேடினர்.. ஆனால் எல்லா வீடுகளுமே பூட்டியிருந்தது. அதனால் மறுபடியும் திரும்பி சென்றுவிட்டனர்.

தொற்று

தொற்று

இந்த கிராமத்தில் ஏற்கனவே ஒருவர் கொரோனாவால் இறந்திருக்கிறார்... மேலும் 5 பேர் தொற்று பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்... இவ்வளவு நடந்தும், பயமில்லாமல் கிராம மக்கள் இருப்பதாகவும், தடுப்பூசி போட்டுக் கொண்டால் நல்லது என்று எவ்வளவோ எடுத்து சொல்லியும் யாரும் கேட்கவில்லையாம்.. தடுப்பூசி போட்டு கொண்ட சிலருக்கு உடல் வலி, தலைவலி, காய்ச்சல் வந்துள்ளது.. இதெல்லாம் நேரில் பார்த்துவிட்ட கிராம மக்கள் அப்போதிருந்தே ஊசி என்றாலே பயந்து நடுங்குகிறார்களாம்..!

English summary
Tribals convinced Chamarajanagar hamlet gets a covid care centre
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X