பெங்களூரில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த கணவன்.. அதை பார்த்த இளம் பெண்.. அதிர வைத்த முடிவு
பெங்களூர்: திருமணத்தை மீறிய உறவை தடுக்க இந்தியாவில் சட்ட ரீதியாக எந்த நிவாரணத்தையும் பெற முடியாமல் பலர் தவிக்கிறார்கள்.திருமணத்தை மீறி உறவு வைத்துள்ள ஆண் பெண் இருவரும் அந்த உறவில் இருப்பதை கையும் களவுமாக பிடித்தாலும், நடவடிக்கை எடுக்க முடியாத நிலையே இருக்கிறது.இந்த உறவு பலரது வாழ்க்கையை ஒன்றும் இல்லாமல் செய்துள்ளது. பெங்களூரு ஹெப்பால் போலீஸ் எல்லைக்குட்பட்ட கனகநகர் பகுதியைச் சேர்ந்த பாஹர் அஸ்மாவின் வாழ்க்கையிலும் புயலை ஏற்படுத்தி உள்ளது.
திருமணத்தை மீறிய உறவு என்பதை நம்மூர் பாஷையில் சொல்வது என்றால் கள்ளக்காதல்.. கள்ளக்காதல் என்பது பல ஊர்களில் நடக்கிறது. பெரிய பணக்காரர்கள், பெரிய நட்சத்திரங்கள் கள்ளக்காதல் விவகாரத்தை சந்தித்தால், சத்தம் இல்லாமல் விவாகரத்து வாங்கி பிரிந்து விடுவார்கள். மனப்பூர்வமாக பிரிந்து விடுவதாக சிலர் அறிக்கைவிட்டு அப்படியே பிரிந்துவிடுவார்கள்.. கருத்துவேறுபாடு என்ற ஒற்றை வார்த்தைகளில் கள்ளக்காதல் விவகாரங்கள் பல முடிவுக்கு வந்துள்ளன.

அவர்களுக்கு பிடித்தவர்களை அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள்.. ஆனால் நடுத்தர வர்க்கம் மற்றும் கணவனை பொருளாதார ரீதியாக சார்ந்து வாழும் பெண்கள் இந்த முடிவினை அவ்வளவு எளிதாக ஏற்க மாட்டார்கள். ஏழை மக்கள் இதனை நினைத்து கூட பார்க்க மாட்டார்கள்.. ஆனால் அவர்கள் வாழ்விலும் கள்ளக்காதல் விவகாரம் புயலை கிளப்புவது உண்டு. அப்படித்தான் பெங்களூரில் நடந்துள்ளது.
பெங்களூரு ஹெப்பால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கனகநகர் பகுதியை சேர்ந்த 33 வயதாகும் பஷிர் என்பவர் விமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாஹர் அஸ்மாவுக்கு 29 வயதாகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 2 பேருக்கும் திருமணம் நடந்து முடிந்தது. குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பஷிருக்கும், ஹெப்பாலை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த பாஹர் அஸ்மா, தனது கணவரை கண்டித்தார். ஆனால் அவர் கள்ளக்காதலை கைவிடவில்லை. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. குடும்பத்தினர் தலையிட்டு 2 பேரையும் சமாதானம் செய்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் கணவர் வெளியே சென்றிருந்தபோது, வீட்டில் தனியாக இருந்த அஸ்மா தூக்குப்போட்டு உயிரை விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஹெப்பால் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அஸ்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பேத்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அஸ்மாவின் குடும்பத்தினர் இது தற்கொலை இல்லை. கள்ளக்காதலுக்கு அஸ்மா இடையூறாக இருந்ததால் கணவனே, அவரை கொன்று உடலை தூக்கில் தொங்கவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குற்றம்சாட்டினர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பஷிர் மற்றும் அஸ்மாவின் செல்போன்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஹெப்பால் போலீசார் பஷிர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications