இந்தியாவிலேயே மோசமான மொழி எது? கூகுள் சொன்ன விடையால் கொதித்து போன இணையம்!
பெங்களூர்: இந்தியாவிலேயே மோசமான மொழி என்ன என்று ஆங்கிலத்தில் கூகுளில் தேடினால் அது தந்த விடையை பார்த்து அதிர்ந்து போயினர் நெட்டிசன்கள்.
கூகுள் காட்டிய சஜஷன் இப்போது ஃபேஸ்புக் ட்விட்டர் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பேசு பொருளாக மாறியுள்ளது.
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு ட்விட்டரில் தொடர்புகொண்டு ஆயிரக்கணக்கான புகார்கள் குவிந்து விட்டன சுமார் 4, 5 மணி நேரத்துக்குள் என்றால் நிலைமை எப்படி போயுள்ளது என்பதை பார்த்துக் கொள்ளலாம்.

மோசமான மொழி
யாரோ ஒருவர் ஆங்கிலத்தில் What is the ugliest language in India? என்று டைப் செய்ய, அதற்கு கன்னடம் என்று சஜஷன் காட்டியுள்ளது கூகுள். ஏதோ ஒரு குறிப்பிட்ட ஒரு வெப்சைட்டில் இது போல ஒரு வரி இடம் பெற்றிருந்ததை கூகுள் பிக் செய்து காட்டி விட்டது. எனவே அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து கொண்டு டுவிட்டர் மூலமாக சுந்தர் பிச்சைக்கு டேக் செய்து இதை நீக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர் கன்னடம் பேசும் மக்கள்.

கூகுள் காண்பித்த சஜசன்
சிலருக்கு ஒரு வெப்சைட்டில் இடம்பெற்ற இந்த வரி கூகுளால் காட்டப்பட்டுள்ளது, சிலருக்கு யூடியூப் ஒன்றில் இடம் பெற்றுள்ள இந்த வரி பிக் செய்து காட்டப்பட்டுள்ளது. ஆனால் இது கூகுளின் சொந்த கருத்து கிடையாது. யாரோ பதிவு செய்ததை தானியங்கி முறைப்படி அது எடுத்துக் காட்டியுள்ளது. இருப்பினும் இது வரலாற்று பதிவாக மாறிவிடக் கூடாது என்று கொதித்துப் போயிருக்கிறார்கள் கன்னட மக்கள்.

உலகம் முழுக்க பேசும் மொழி
சுமார் 6 கோடி மக்கள் உலகம் முழுக்க கன்னடம் பேசுகிறார்கள் . நீங்கள் இதை மோசமான மொழி என்று இப்படிக் கூறக் கூடாது என்று வலியுறுத்துகிறார் இந்த நெட்டிசன்.

இனிமையான மொழி
உலகத்தின் பழமையான மொழிகளில் ஒன்று கன்னடம். அழகான மொழி கன்னடம். கர்நாடக மக்களைப் போலவே அது இனிமையானது. எப்போதுமே எங்களது மொழியை நாங்கள் நேசிப்போம். ஆனால் பிறரது மொழியை மதிப்போம். எனவே கன்னடம் மோசமான மொழி என்று கூகுள் குறிப்பிடுவது சரியானது கிடையாது என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

உலகின் பழமையான மொழி
கர்நாடகாவுக்கு தனி வரலாறு இருக்கிறது. தனி கலாச்சாரம் இருக்கிறது. அனைத்து மொழிகளையும் மதிப்புக்கு உரியதாக பார்க்கவேண்டும் . உலகத்திலேயே கன்னடம் பழமையான மொழி. எனவே உங்களது சாப்ட்வேரில் திருத்தம் செய்து கொள்ளுங்கள் என்று குமுறலோடு கூறுகிறார் இந்த நெட்டிசன்..
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications