குளியலறையில் "அது" பக்கத்திலேயே.. வெலவெலக்க செய்த மகாலட்சுமி நண்பர்.. பெங்களூர் கள்ளக்காதல் உதறுதே
பெங்களூர்: பெங்களூர் பெண்ணை கொலை செய்து துண்டு துண்டாக்கி போட்டது, பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது. இந்த கொலை சம்பந்தமாக பல்வேறு தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளளன.
பெங்களூருவின் வயலிக்காவல் பகுதியை சேர்ந்த 27 வயது மகாலட்சுமி, கணவரை பிரிந்து வாழ்கிறார். நேபாளத்தை சேர்ந்தவர்கள் இவர்கள். மகாலட்சுமி மட்டும் பெங்களூரில் 5 மாத காலமாக தனி வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு, மகாலட்சுமி கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்தது. ஃபிரிட்ஜ் முழுக்க, சடலத்தில் புழுக்கள் நெளிந்திருந்தன.

இந்த கொலை வழக்கில் மகாலட்சுமிக்கு மேற்கு வங்க இளைஞர் முக்தி ரஞ்சன் ரே என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டதாகவும், இதனாலேயே தம்பதிக்குள் தகராறு வந்து, மகாலட்சுமியின் கணவர் பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
தற்கொலை: இதையடுத்து, ரஞ்சனை கைது செய்ய போலீசார் தயாரானபோது, ஒடிசா பத்ராக் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் ரஞ்சன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.. ரஞ்சன் போலீசுக்கு பயந்து தற்கொலை செய்துள்ளார்.
தற்கொலை செய்வதற்கு முன்பு, டைரியில் சில விஷயங்களை எழுதி வைத்துள்ளார்.. அந்த டைரியில், "என்னுடைய காதலி மகாலட்சுமியை செப்டம்பர் 3-ந்தேதி கொலை செய்தேன்.. சம்பவத்தன்று மகாலட்சுமியை பார்க்க வீட்டுக்கு சென்றபோது, அவளது நடத்தையை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இதை பற்றி கேட்டதற்கு மகாலட்சுமி என்னை தாக்கி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான், அவளை கொலை செய்து விட்டேன். அவளுடைய நடத்தையால் எரிச்சலடைந்தே, இப்படி கொலை செய்தேன்" என்று எழுதி வைத்துள்ளார்.
மகாலட்சுமி: இதையடுத்து, ரஞ்சனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முக்தி, சசிதர் மற்றும் சுனில் ஆகிய சக பணியாளர்கள் 3 பேருடன், மகாலட்சுமி தகராறில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. எனவே, சஞ்சய் தவிர, மற்ற 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.. அதேபோல, அஷ்ரப் என்பவருடன் மகாலட்சுமி நெருங்கி பழகியிருக்கிறார். அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நிறைய ஆண் நண்பர்களுடன் மகாலட்சுமி பழகி வந்துள்ளதால், வழக்கின் விசாரணை இனியும் தொடரும் என்றே தெரிகிறது. இதனிடையே, ஒடிசாவின் பத்ராக் மாவட்டம், துடிசியில் மயானத்தில் உள்ள மரத்தில், முக்தி ரஞ்சன் ராய் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால், அவர் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர், ஒரு பேக் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறிய டைரி: அந்த பேக்கிற்குள் போலீசார் ஆராய்ந்தபோதுதான், இந்த சிறிய டைரி இருந்துள்ளது. மகாலட்சுமியை எப்படி கொலை செய்தேன் என்பது முதல் அந்த டைரியில் விரிவாக எழுதி வைத்துள்ளாராம். இந்த தகவல்தான் தற்போது வெளியாகி பதற செய்து வருகிறது.
"கடந்த 3ம் தேதி மஹாலட்சுமி வீட்டிற்கு சென்றேன். சில தனிப்பட்ட பிரச்னைகளுக்காக அவருடன் சண்டை போட்டேன். அப்போது அவர் என்னை தாக்கினார். இதனால் கோபத்தில் அவரை தலையணையால் முகத்தை அமுக்கி, மூச்சு திணறடித்து கொலை செய்தேன்.
ஆசிட்: பாத்ரூமுக்கு அவரது உடலை இழுத்துச்சென்றேன்.. அங்கேயே வைத்து ஆக்சா பிளேடால் சடலத்தை அறுத்தேன். பிறகு உடலை 59 துண்டுகளாக வெட்டினேன். வெட்டப்பட்ட உடற் கூறுகளை கொண்டு வந்து, கிச்சனிலுள்ள பிரிட்ஜ்ஜில் வைத்தேன். மஹாலட்சுமி நடத்தை சரியில்லை.. அந்த விரக்தியால்தான் இந்த செயலை செய்தேன்" என்று எழுதியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, சடலத்தை பாத்ரூமில் வைத்து துண்டாக்கியபிறகு, பாத்ரூம் உட்பட வீட்டில் ரத்தம் படிந்த இடத்தில் எல்லாம் ஆசிட்டை ஊற்றி, நன்றாக கழுவி விட்டு சென்றுள்ளாராம் ரஞ்சன்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications