பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கலைக்கு ஊக்கம்.. பல துறைகளில் திறமைமிக்க 100 பேரை தேர்ந்தெடுத்து ஸ்காலர்ஷிப் வழங்கும் Young Artiste

பெங்களூர்: இசை மற்றும் நடனம் ஆகியவற்றின் பல்வேறு வகைகளில் தேசிய அளவிலான திறமைப் போட்டியான சிங்கால் ஐயர் குடும்ப அறக்கட்டளை (SIFF) Young Artiste அதாவது, 'இளம் கலைஞர் 2020' போட்டியில் தலை சிறந்த 100 இறுதிப் போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 11-18 வயதுக்குட்பட்ட மாணவர்களில் இருந்து இந்த பட்டியல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 12,000 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்ததில் டாப் 100 இறுதி போட்டியாளர்கள் தேர்வாகியுள்ளனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், சர்வதேச தரம் வாய்ந்த அம்ஜத் அலி கான், டெரன்ஸ் லூயிஸ், ஷோவானா நாராயண், ஷால்மாலி கோல்கடே மற்றும் அருணா சைராம் ஆகியோரால் இந்த போட்டித் திட்டம் தொடங்கப்பட்டது.

Young Artiste announces top 100 finalists for its scholarship programme

முதல் 100 இறுதிப் போட்டியாளர்களுக்கு, இறுதிப்போட்டியில் உயர்தர வழிகாட்டுதல் மற்றும் ரொக்கப் பரிசு கிடைக்கும். பரிசுத் தொகை 25 லட்சமாகும். இறுதிப் போட்டியாளர்களாக தேர்வாகியுள்ளோர், இளம் கலைஞர் மேம்பட்ட வழிகாட்டல் திட்டத்தில் (YAMP) சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் வழிகாட்டப்படுவார்கள்.

டாக்டர் எல் சுப்பிரமணியம், கவிதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாதவி முட்கல் போன்ற இசை மற்றும் நடன கலைஞர்கள், இந்த 100 பங்கேற்பாளர்களுக்கு வழிகாட்ட ஒப்புதல் அளித்துள்ளனர். ருக்மிணி விஜயகுமார் (பரதநாட்டியம்), அனுபமா பகவத் (சித்தார் / சரோத்), நிகிதா காந்தி (இந்திய மற்றும் மேற்கத்திய வோக்கல்), சாகர் போரா (ஹிப்-ஹாப்) போன்ற வல்லுநர்கள், குறிப்பிட்ட அமர்வுகளை வழிநடத்துவார்கள். திறமைகளின் காட்சியாக இருக்கப்போகிறது இறுதிப் போட்டி. COVID-19 நிலைமை மற்றும் அந்த நேரத்தில் வழங்கப்பட்டும் அரசு வழிகாட்டுதல்களின்படி இறுதிப் போட்டி நடத்தப்படும்.

"திறமைகளை வெளிக்கொணர்வதற்கான போட்டிக்கு சாட்சியாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இறுதிப் போட்டியாளர்களை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். இந்த முயற்சியில் எங்களுடன் சேர மிகவும் உதவியாக இருந்த வழிகாட்டிகளுக்கும் நீதிபதிகளுக்கும் நாங்கள் நன்றி கூறுகிறோம்" என்றார் கவிதா ஐயர். இளம் கலைஞருக்கான, இணை நிறுவனர், இவர்.

இளம் கலைஞர் சீசன் 1 ஒரு மகத்தான வரவேற்பை பெற்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் போட்டியாளர்கள் விண்ணப்பித்தனர். உஜ்ஜைன் முதல் இம்பால் வரை, டெல்லியில் இருந்து கலாச்சார செழுமை கொண்ட திமாபூர் வரை, வடக்கு 24 பர்கானாக்கள் முதல் உடுப்பி மற்றும் கோழிக்கோடு வரை பங்கேற்பாளர்கள் அனைவரையும் நாங்கள் சந்தித்திருக்கிறோம்! நாடு லாக்டவுன் காலத்திற்கு போனதும், கலை பெரும்பாலானவர்களுக்கு ஆடம்பரமாக மாறியது. ஆனால், இந்த போட்டிக்காக நாங்கள் தொடர்ந்து பாடுபட்டு, யோசிக்க முடியாத வகையில் ஆடிஷன்களை நடத்தினோம். இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றவர்கள், அந்தந்த துறைகளில் தனித்துவ திறமையை காண்பிக்க வேண்டும் என்பதில் அசைக்க முடியாத ஆர்வத்தை, தனித்துவமான வழிகளில் வெளிப்படுத்தியுள்ளனர்.

கலை குடும்பத்தில் மட்டுமல்ல, அதுபோன்ற பின்னணி இல்லாத குடும்பத்திலிருந்தும் முதல் தலைமுறை விற்பன்னர்களை வெளிக் கொண்டு வந்துள்ளது இந்த நிகழ்ச்சி. இந்தியாவின் சிறப்பான பல விஷயங்களை இதில் அறிந்து கொள்ள முடிந்தது. கலைக்கு பாகுபாடு இல்லை, கலைக்கு எல்லை இல்லை. யார் வேண்டுமானாலும் கலைஞராகலாம்.

"இளம் கலைஞர்களின் மறைந்திருக்கும் திறனைத் தெரிந்துகொள்வதற்கும், அங்கீகரிப்பதற்கும் ஒரு தேசிய அளவிலான தளத்தை அமைக்கும் நோக்கில் Young Artiste உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களின் திறமைகளைப் பயன்படுத்தவும், அவர்களுக்கு வளமான கற்றல் களத்தையும் வழங்குகிறது. வழிகாட்டல் என்ற விஷயத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம். மாறுபட்ட கலை வடிவங்களுடன் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பு, அவர்களின் அறிவு, ஆற்றல் அளவை விரிவுபடுத்துவதற்கு நிச்சயமாக உதவும். " என்கிறார் SIFF இன் அறங்காவலர் சந்தீப் சிங்கால்.

மாஸ்டர் கிளாஸ்கள், பயிற்சி பட்டறைகள் மற்றும் சக இளம் கலைஞர்களிடையே ஒத்துழைப்பு ஆகியவற்றின் கலவையை YAMP உள்ளடக்கியுள்ளது. போட்டியாளர்களை இறுதி போட்டிக்கு இது தயார்ப்படுத்தும். Young Artisteக்கு மதிப்புமிக்க நடுவர் குழு உள்ளது. மேலும் இந்த வல்லுநர்கள் 20 பிரிவுகளின்கீழ் ஒவ்வொன்றிற்கும் YAMPக்கான பயிற்சி பட்டறைகளை நடத்துவார்கள். "இளம் கலைஞர் வழிகாட்டல் திட்டத்துடன் இணைந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியா மறைக்கப்பட்ட திறமைகளால் நிரம்பிய, கண்டுபிடிக்கப்படுவதற்குக் காத்திருக்கும் ஒரு நாடு. இந்த வளர்ந்து வரும் கலைஞர்களைச் சந்திப்பது உண்மையில் ஊக்கமளிக்கிறது. ஒரு அற்புதமான செயலைச் செய்ததற்காக SIFF - Young Artiste முன்னெடுப்பை, நான் பாராட்டுகிறேன். நமது நாட்டின் திறமையான இளைஞர்களைக் கண்டுபிடித்து வளர்க்கும் வேலை இதுவாகும்" என்று Young Artiste வழிகாட்டியான டாக்டர் எல். சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

இளம் கலைஞர் மேம்பட்ட வழிகாட்டல் திட்டம் கலைக் கல்வியில் ஒரு கேம் சேஞ்சராக மாறியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மாணவர்களுக்கு, திறமையை காண்பிக்கவும், ஒத்த கலைஞர்களின் சமூகத்தை உருவாக்கவும் உதவுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட 100 இறுதிப் போட்டியாளர்களின் முழு பட்டியலையும் பார்க்க, நீங்கள் Young Artiste வலைத்தளத்தைப் பார்க்கலாம்.

A Journey to the Top 100 Young Artistes:

Young Artiste 2020 என்பது இந்தியா முழுவதும் உள்ள பள்ளி குழந்தைகளுக்கான தேசிய அளவிலான திறமைப் போட்டியாகும். மாணவர்களுக்கு ஊக்கத்தையும் அங்கீகாரத்தையும் வழங்குவதே நோக்கம். Young Artiste முடிந்தவரை பல மாணவர்களுக்கு விருது வழங்கவும் ஊக்குவிக்கவும் விரும்புகிறது. அனைத்து 20 பிரிவுகளிலும் இறுதிப் போட்டியாளர்களுக்கு 25 லட்சம் மதிப்புள்ள 100 உதவித்தொகைகளை வழங்கும். இது சிறந்த மாணவர் திறமைகளைக் கண்டறிந்து கொண்டாடுவதையும், கலை மூலம் அவர்களின் பயணத்தில் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அம்ஜத் அலி கான், டெரன்ஸ் லூயிஸ், ஷோவானா நாராயண், ஷால்மாலி கோல்கடே, அருணா சைராம் மற்றும் பலரும் நாட்டின் சிறந்த மற்றும் புகழ்பெற்ற கலைஞர்களால் வழிகாட்டப்பட்டு, ஒரு தேசிய அரங்கில் அரங்கேற்றம் நிகழ்த்துவதற்கான வாழ்நாளில் ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பு, இந்த மாணவர்களுக்கு கிடைக்கும். இளம் கலைஞர்களை உருவாக்குவதில் இந்த ஜாம்பவான்களின் வழிகாட்டுதல் மற்றும் அறிவு ஆகியவை முக்கியமானவை.

Facebook: Young Artiste 2020

Instagram: Young Artiste 2020

Twitter: Young Artiste 2020

SIFF பற்றி: சிங்கால் ஐயர் குடும்ப அறக்கட்டளை (SIFF) பெங்களூரைச் சேர்ந்த தொண்டு அமைப்பாகும். சிறப்பான கல்வி மற்றும் இந்திய இசை மற்றும் கலைகள் மீதான காதலை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட அமைப்பு இதுவாகும்.

Web: http://siff.in/

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X