For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெட்ரோல் விலையை நாங்க குறைச்சுட்டோம்.. நீங்க எப்போ? - திமுகவை கேட்கும் அண்ணாமலை

Google Oneindia Tamil News

கள்ளக்குறிச்சி: திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது போல பெட்ரோல்,டீசல் விலையை 4 முதல் 5 ரூபாய் வரை குறைக்க வேண்டும் தேர்தல் வாக்குறுதி அளிக்காமல் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்து உள்ளதாகவும் கள்ளக்குறிச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி

Recommended Video

    பெட்ரோல் விலையை நாங்க குறைச்சுட்டோம்.. நீங்க எப்போ? - திமுகவை கேட்கும் அண்ணாமலை

    பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணாயிக்கலாம் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், பெட்ரோல் டிசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை தினமும் எண்ணெய் நிறுவனங்களால் மாற்றி அமைக்கப்படுகிறது.

    இன்றைய நிலவரப்படி சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் பொதுமக்கள் கடும் அவதியைச் சந்தித்து வருகின்றனர்.

    2022 புத்தாண்டில் கோடீஸ்வரர் ஆக மாறப்போவது யார் தெரியுமா? 2022 புத்தாண்டில் கோடீஸ்வரர் ஆக மாறப்போவது யார் தெரியுமா?

    அண்ணாமலை பேட்டி

    அண்ணாமலை பேட்டி

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டிய நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் சார்பில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் வாக்குறுதியில் திமுக உறுதியளித்தது போல் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க திமுக தலைமையிலான தமிழக அரசு முன்வர வேண்டும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

    பாஜக கூறவில்லை

    பாஜக கூறவில்லை

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் மஹாலில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மத்திய பிஜேபி அரசு தனது தேர்தல் அறிக்கையில் எங்கும் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படும் என தெரிவிக்கவில்லை எனவும், ஆனால் தேர்தல் வாக்குறுதி அளிக்காமல் பெட்ரோல்,டீசல் விலையை மத்திய அரசு குறைத்து உள்ளதாக கூறினார்.

    திமுக வாக்குறுதி

    திமுக வாக்குறுதி

    தமிழகத்தில் உள்ள திமுக தலைமையிலான அரசு தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல் டீசல் விலை 4 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை குறைப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த பிறகு குறைத்தது 3 ரூபாய் தான் என்றும், இதுகுறித்து திமுக அமைச்சர்கள் பேச வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதிகள் குறிப்பிட்டதுபோல குறைந்தபட்சம் நான்கு முதல் ஐந்து ரூபாய் குறைத்து விட்டு பேசினால் அவர்களுக்கும் மரியாதை தேர்தல் அறிக்கைக்கு மரியாதை எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

    ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல்

    ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல்

    திமுக எம்பி டி.ஆர்.பாலு பெட்ரோல் டீசல் விலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு என்று கூறுவதாகவும் குறிப்பிட்ட அண்ணாமலை, தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வரக்கூடாது என கூறுவதாகும், பெட்ரோல் டீசல் விலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவருவது குறித்து திமுக இரட்டை நிலைபாட்டில் இருப்பதாகவும் இது குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தனது நிலைபாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    English summary
    BJP leader Annamalai said in an interview that the central government has reduced the price of petrol and diesel without making any election promise.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X