For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக உள்ளது: ப.சிதம்பரம்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக உள்ளதாக தெரிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் சிதம்பரம். அப்போது இந்திய பொருளாதார நிலை குறித்து முன்னாள் நிதியமைச்சர் யஸ்வந்த் சின்கா எழுப்பியிருந்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :-

Chidambaram says economy more stable, no talk of downgrade

கடந்த 2008 ஆண்டில் உலகின் அனைத்து நாடுகளுமே பொருளாதார நெருக்கடியை சந்தித்தன. தற்போது இந்தியாவின் பொருளாதார நிலையில் நல்ல நிலையில் உள்ளது. மொத்த பணவீக்க விகிதம் 5.9 சதவீதமாக குறைந்துள்ளது. இந்தியாவில் அன்னிய முதலீடூ ரூ.19,800கோடியாக உள்ளது. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 4.9 சதவீதமாக உள்ளது.

இந்தியாவின் அன்னிய செலவானி மதிப்பு ரூ.18லட்சம் கோடியை தாண்டியுள்ளது. நடப்பு கணக்கு பற்றக்குறை 35 பில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி 19.65லட்சம் கோடியாக உள்ளது.

இந்தியாவின் பொருளாதாரம் 2001-2002 ஆண்டு தான் மிகவும் சரிந்து காணப்பட்டது அபபோது பாஜக தான் ஆட்சியில் இருந்தது. அன்று நிதியமைச்சராக யஸ்வந்த் சின்கா இருந்தார்..

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு ஆட்சியில் கல்வி துறையில் புரட்சி ஏற்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மேலும் ஜக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கோடிக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது' என இவ்வாறு அவர் கூறினார்.

English summary
Finance Minister P Chidambaram addressed a press conference at the Congress office at Delhi .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X