ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!

Subscribe to Oneindia Tamil

இந்தியாவின் 2வது மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் (Infosys), தனது நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) சலில் பரேக்கிற்கு 2025-26 நிதியாண்டிற்கான அதிகாரப்பூர்வ ஊதிய விவரங்களை தனது வருடாந்திர அறிக்கையின் மூலம் வெளியிட்டுள்ளது.

சலில் பரேக் கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் வெறும் 2.5 சதவீதம் அளவிலான சம்பளம உயர்வை மட்டுமே பெற்றுள்ளார். இதன் மூலம் மொத்தம் 82.6 கோடி ரூபாயை ஊதியமாகப் பெற்றுள்ளார்.

பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம், தனது 3 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கான சம்பள உயர்வு (Salary Revisions) எப்போது வழங்கப்படும் என்ற காலக்கெடுவைக் குறிப்பிடாமல் மௌனம் காத்து வரும் வேளையில், சிஇஓ-வின் இந்த மெகா சம்பள விவரம் ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

infosys Salary IT salil parekh salary infosys ceo remuneration 2026 infosys ceo salary hike infosys employee salary delay salil parekh 82 6 crore infosys ceo pay gap indian it ceo salaries infosys fy26 annual report salil parekh compensation tech ceo salary india FY26 82 6

ரூ.82.6 கோடி மெகா சம்பளம்

இன்போசிஸ் நிறுவனத்தின் சிஇஓ சலில் பரேக் பெற்றுள்ள இந்த 82.6 கோடி ரூபாய் சம்பளத்தில் பல்வேறு நிதிசார்ந்த பிரிவுகள் அடங்கியுள்ளன. இதில் அவரது நிலையான அடிப்படைச் சம்பளம் (Fixed Salary) 8.5 கோடி ரூபாயாகும். நிறுவனத்தின் செயல்திறன் அடிப்படையில் வழங்கப்படும் Variable Pay 23.35 கோடி ரூபாயாகப் உள்ளது. இவை அனைத்தையும் விட மிக முக்கியமாக, நிறுவனம் வழங்கிய பங்குகளை பணமாக மாற்றியதன் மூலம் (Gains from exercised stock options and restricted stock units) அவருக்குக் கிடைத்த தொகை மட்டுமே 50.75 கோடி ரூபாயாகும்.

இந்த நிதியாண்டில் மட்டும், சலில் பரேக் இன்போசிஸ் நிறுவனத்தின் 2015ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் 2,72,400 கட்டுப்பாட்டுப் பங்கு அலகுகளையும் (RSUs), 2019ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் 64,690 கட்டுப்பாட்டுப் பங்குகளை பணமாக மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 82.6 கோடி ரூபாயை 365 நாட்களுக்கு கணக்கிடும் போது ஒரு நாளுக்கு 22.63 லட்சம் ரூபாய், ஒரு மணிநேரத்திற்கு 94,292 ரூபாய், ஒரு நிமிடத்திற்கு 1,571 ரூபாய், ஒரு நொடிக்கு 26 ரூபாய்.

infosys Salary IT salil parekh salary infosys ceo remuneration 2026 infosys ceo salary hike infosys employee salary delay salil parekh 82 6 crore infosys ceo pay gap indian it ceo salaries infosys fy26 annual report salil parekh compensation tech ceo salary india FY26 82 6

742 மடங்கு அதிக ஊதியம்

இன்போசிஸ் நிறுவனத்தின் இந்த புதிய வருடாந்திர அறிக்கையில், சிஇஓ மற்றும் அந்நிறுவனத்தின் சராசரி ஊழியர்களின் ஊதியத்திற்கு இடையேயான சம்பள வித்தியாசம் பெரிய இடைவெளி இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

பங்குகள், ஊக்கத்தொகைகள் அனைத்தையும் உள்ளடக்கிப் பார்க்கும் போது, சலில் பரேக் பெற்ற ஒட்டுமொத்த ஊதியம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஒரு சராசரி ஊழியரின் நடுத்தர ஊதியத்தை (Median Employee Remuneration) விட சுமார் 742 மடங்கு அதிகமாகும்.

ஒருவேளை, இந்த பங்குகள் மூலமாகக் கிடைத்த ஊக்கத்தொகை லாபங்களைத் தவிர்த்துவிட்டு கணக்கிட்டாலும் கூட, இந்த ஊதிய விகித இடைவெளியானது ஒரு சராசரி ஊழியரை விட 289 மடங்கு அதிகமாகவே நீடிக்கிறது.

டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல் சிஇஓ சம்பள ஒப்பீடு

இந்திய ஐடி துறையின் பிற முன்னணிப் போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, இந்த சம்பள விவரங்கள் சந்தையின் தற்போதைய எதார்த்த நிலையைத் தெளிவுபடுத்துகின்றன. இன்போசிஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய போட்டி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி கே.கிருதிவாசன் ஆண்டுக்கு 28 கோடி ரூபாய் மட்டுமே ஊதியமாகப் பெறுகிறார்.

அதே சமயம், இன்போசிஸை விடச் சிறிய நிறுவனமான விப்ரோவின் (Wipro) சிஇஓ ஸ்ரீநிவாஸ் பல்லியா கடந்த 2024-25 நிதியாண்டில் 53.6 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றுள்ளார். அனைவரையும் விட உச்சமாக, எச்சிஎல் டெக் (HCLTech) நிறுவனத்தின் சிஇஓ சி. விஜயகுமார் கடந்த 2024-25 நிதியாண்டில் 94.6 கோடி ரூபாய் பெற்று ஒட்டுமொத்த இந்திய ஐடி துறையிலேயே மிக அதிக சம்பளம் வாங்கும் நபராக முதலிடத்தில் நீடிக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+