For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெருங்கும் பொங்கல் பண்டிகை... வெல்லம் விலை வீழ்ச்சி... மஞ்சள் விளைச்சலும் குறைந்தது!!

பொங்கல் பண்டிகைக்கு ஒருவாரம் உள்ள நிலையில் வரத்து அதிகரிப்பால் வெல்லம் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

By Super Admin
Google Oneindia Tamil News

ஈரோடு: பொங்கல் பண்டிகைக்கு வெல்லம் போட்டு சர்க்கரை பொங்கலும், வெண்பொங்கலும் சமைத்து இறைவனுக்கு படைத்து வழிபாடுவார்கள். சர்க்கரைப் பொங்கலுக்கு தேவையான வெல்லம் கரும்பில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு மழை குறைந்து விவசாயம் பொய்த்து போன நிலையிலும் கிடைத்த சிறிதளவு நீரில் கரும்பு சாகுபடி செய்து பொங்கல் பண்டிகை விற்பனைக்கு வெல்லத்தை உற்பத்தி செய்துள்ளனர் விவசாயிகள்.

வரத்து அதிகரிப்பால் வெல்லம் விலை வீழ்ச்சியடைந்த நிலையில் தமிழகத்தில் மஞ்சள் விளைச்சலும் இந்தாண்டு குறைவாகவே காணப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மஞ்சள், கரும்பு, வாழை, நெல் ஆகியன அதிகமாக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலத்தில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. ஏராளமான விவசாயிகள் தங்களுடைய கரும்புகளை சர்க்கரை ஆலைகளுக்கு விற்பனை செய்கிறார்கள்.

வெல்லம் தயாரிப்பு

வெல்லம் தயாரிப்பு

பல விவசாயிகள் தங்களுடைய கரும்புகளில் இருந்து உருண்டை வெல்லம், அச்சு வெல்லம், நாட்டு சர்க்கரை ஆகியவற்றையும் உற்பத்தி செய்து வருகிறார்கள். இம்மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் அச்சு வெல்லம், உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை ஆகியவை சித்தோடு, கவுந்தப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள வெல்லம் மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. அங்கு வாரந்தோறும் சனிக்கிழமை ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

வரத்து அதிகரிப்பு

வரத்து அதிகரிப்பு

தமிழகம் முழுவதும் வருகிற 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு வெல்லம் உற்பத்தி தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு வெல்லம் வரத்து அதிகரித்து உள்ளது. இதேபோல் தாராபுரம், காங்கேயம், மேட்டூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகளும் வெல்லம், நாட்டு சர்க்கரையை விற்பனைக்காக இந்த மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வருகிறார்கள்.

வெல்லம் விற்பனை

வெல்லம் விற்பனை

வாரந்தோறும் ஏலத்திற்கு சுமார் 3 ஆயிரம் மூட்டை உருண்டை வெல்லம் கொண்டு வரப்படும். ஆனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெல்லத்தின் வரத்து அதிகரித்து உள்ளது. கடந்த வாரம் சுமார் 7 ஆயிரம் மூட்டைகளில் உருண்டை வெல்லமும், ஆயிரம் மூட்டைகளில் அச்சு வெல்லமும், 1,500 மூட்டைகளில் நாட்டுசர்க்கரையும் விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

 விலை வீழ்ச்சி

விலை வீழ்ச்சி

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது வெல்லம் ஒரு மூட்டை ரூ.1,500 வரை விற்பனை ஆனது. இந்த ஆண்டு ஒரு மூட்டை ரூ.1,300 முதல் ரூ.1,350 வரை விற்பனை ஆகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அச்சுவெல்லம் 30 கிலோ மூட்டை ஒன்று ரூ.1,100 முதல் ரூ.1,260 வரையும், உருண்டை வெல்லம் 30 கிலோ மூட்டை ரூ.1,050 முதல் ரூ.1,240க்கும் விற்பனை ஆகியது. ஆனால் விவசாயிகள் எதிர்பார்த்த விலை வெல்லத்துக்கு கிடைக்கவில்லை.

உற்பத்தியாளர்கள் கவலை

உற்பத்தியாளர்கள் கவலை

வெல்லம் விலை வீழ்ச்சி காரணமாக உற்பத்தியாளர்கள் மிகவும் கவலை அடைந்து உள்ளனர். கடுமையான வறட்சி நிலவி வருவதால் கரும்பு சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும், வெல்லம் உற்பத்திக்கான செலவும் விவசாயிகளுக்கு அதிகமாகி உள்ளது. ஆனால் வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

மஞ்சள் விளைச்சல் பாதிப்பு

மஞ்சள் விளைச்சல் பாதிப்பு

தமிழகத்தில் மஞ்சள் விளைச்சலும் இந்தாண்டு குறைவாகவே காணப்படுகிறது. ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பெருமளவு மஞ்சள் சாகுபடி செய்து வருகின்றனர். பருவமழை பொய்த்ததாலும், பவானி சாகர் அணையிலிருந்து போதிய தண்ணீர் கிடைக்காததாலும் மஞ்சள்பயிர் கருகி வருகிறது. மேலும், மஞ்‌சள் பயிரை கிழங்கு அழுகல் நோயும் கடுமையாகத் தாக்கியுள்ளது. இதனால், அதன் விளைச்சல் பாதியாகக் குறைந்திருக்கிறது.

நிவாரணம் தேவை

நிவாரணம் தேவை

இதனால், மஞ்சளை பொங்கலுக்கு பூஜைக்காக வைப்பதற்குக் கூட தட்டுப்பாடு நிலவும் என கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு பயன்படுத்தப்படும் மஞ்சளின் விலை அதிகமாக இருக்கும் அல்லது விற்பனைக்கு மிகக் குறைந்தளவு மட்டும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, மஞ்சள் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
Pongal festival are happy days for sugarcane farmers But this year, the prices have dipped. A 30 kg bag of jaggery was sold at Rs. 1,050 for a bag said a sugarcane farmer
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X