பங்கு வர்த்தகத்தில் ரிஸ்க் எடுக்காதீங்க... இந்த வாரம் வச்சு செஞ்சிரும் ஜாக்கிரதை!

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

மும்பை: பங்குச்சந்தையில் பெரிய அளவில் வர்த்தகத்தில் ஈடுபடும் முதலீட்டாளர்கள், எந்த விதமான ரிஸ்க்கையும் எடுக்க நினைக்காமல், இன்றைக்கு வாங்கிய பங்குகளை நாளை விற்றுக்கொள்ளலாம் என்று நினைத்து இருப்பு வைக்க வேண்டாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

திங்கள் கிழமை ஆரம்ப ஜோரில் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 10400 என்ற புதிய உச்சத்தை தொட்டாலும் அதற்கு மேலும் செல்வதற்கு பெரிய அளவில் சந்தையை பாதிக்கும் காரணிகள் ஏதும் இல்லாததால் மந்த நிலையிலேயே இருக்க வாய்ப்புகள் உள்ளதாக சந்தை வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.

இந்த வாரம் இந்தியப் பங்குச் சந்தைகளின் முன்பேர வர்த்தகச் சந்தைகளின் கணக்குகள் முடிக்கும் வாரம் என்பதால் எந்தப்பக்கமும் செல்லாமல் சற்று பாதுகாப்பான பக்கவாட்டு நிலையிலேயே வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்றம் பெற்ற பங்குச்சந்தைகள்

ஏற்றம் பெற்ற பங்குச்சந்தைகள்

இந்திய வங்கிகளின் மறுசீரமைப்பிற்காகவும் மூலதனத்தை அதிகரிப்பதற்காகவும் சுமார் 2.11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் கடந்த வாரத்தில் ஒருநாள் தவிர்த்து மற்ற நான்கு நாட்களிலும் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடனேயே முடிந்தன. வாரந்திர இறுதியில் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி சுமார் 176 புள்ளிகளும் மும்பை பங்குச்சந்தை குறியீடான் சென்செக்ஸ் சுமார் 650 புள்ளிகளும் அதிகரித்தன.

அமெரிக்கா வட்டி விகித அறிவிப்பு

அமெரிக்கா வட்டி விகித அறிவிப்பு

இந்த வாரத்தில் அமெரிக்காவின் வட்டி விகித அறிவிப்பு தவிர பெரிய அளவில் சந்தையை பாதிக்கும் காரணிகள் எதுவும் இல்லாததால், இந்திய பங்குச் சந்தைகள் பக்கவாட்டு நிலையிலேயே செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக சந்தை வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

மந்தநிலையில் வர்த்தகம்

மந்தநிலையில் வர்த்தகம்

திங்கள் கிழமை ஆரம்ப ஜோரில் தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 10400 என்ற புதிய உச்சத்தை தொட்டாலும் அதற்கு மேலும் செல்வதற்கு பெரிய அளவில் சந்தையை பாதிக்கும் காரணிகள் ஏதும் இல்லாததால் மந்த நிலையிலேயே இருக்க வாய்ப்புகள் உள்ளதாக சந்தை வல்லுநர்கள் கணிக்கிறார்கள்.

சுட்டுக்கொள்ள வாய்ப்பு

சுட்டுக்கொள்ள வாய்ப்பு

எனவே சிறிய முதலீட்டாளர்கள் சந்தையை விட்டு சற்று ஒதுங்கி இருந்தால் தங்களின் பணத்தை காப்பாற்றிக்கொள்ளலாம். அப்படியே வர்த்தகத்தில் ஈடுபட நினைத்தாலும் சிறிய அளவில் அதிலும் 10175 என்ற கட்டுப்பாட்டு நிலையை (Stoploss level) வைத்துக்கொண்டு தங்களின் வர்த்தகத்தை தொடரலாம். இல்லையெனில் முதலீட்டாளர்கள் தங்களின் கையை சுட்டுக்கொள்ள நேரிடும்.

வச்சி செஞ்சிரும் ஜாக்கிரதை

வச்சி செஞ்சிரும் ஜாக்கிரதை

பெரிய அளவில் வர்த்தகத்தில் ஈடுபடும் முதலீட்டாளர்கள், எந்த விதமான ரிஸ்க்கையும் எடுக்க நினைக்காமல், இன்றைக்கு வாங்கிய பங்குகளை நாளை விற்றுக்கொள்ளலாம் என்று நினைத்து இருப்பு வைத்தால், அப்புறம் பங்குச்சந்தை நம்மை வச்சு செய்துவிட்டுப்போகலாம். எனவே உஷார். இதைவிட நல்ல வாய்ப்புகள் வரும் சற்று பொறுத்திறுங்கள்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian Equity market will see all-time new record level of 10400-10600 and take U turn and will move side way level. Traders are advised to avoid their high level leveraged position.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X