For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 60% உயர்வு - நேரடி வரி வசூலும் அதிகரிப்பு

ரூ.1 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இந்தியாவில் 60 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் பெறுவதாகத் தெரிவித்த

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1.40 லட்சமாக உயர்ந்துள்ளது. இது 60 சதவிகிதம் அதிக வளர்ச்சியாகும்.

2014-15 வரி செலுத்தும் ஆண்டில் மொத்தம் 88,649 பேர் ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் பெற்றதற்கான வரி செலுத்தியுள்ளனர். இந்த எண்ணிக்கை 2017-18 வரி செலுத்தும் ஆண்டில் 1,40,139 ஆக உயர்ந்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் இதுவரையில் நேரடி வரியாக ரூ.4.89 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் வருமான வரி மற்றும் நேரடி வரிகள் வாரியம் குறித்த விவரங்களை வருமான வரித் துறையின் ஒரு அங்கமான மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது.

ரூ.1 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம்

ரூ.1 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம்

கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1.40 லட்சமாக உயர்ந்துள்ளது. இது 60 சதவிகிதம் வளர்ச்சியாகும். 2014-15 வரி செலுத்தும் ஆண்டில் மொத்தம் 88,649 பேர் ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் பெற்றதாக அதற்கான வரி செலுத்தியுள்ளனர். இந்த எண்ணிக்கை 2017-18 வரி செலுத்தும் ஆண்டில் 1,40,139 ஆக உயர்ந்துள்ளது.

 வரி செலுத்தும் கோடீஸ்வரர்கள்

வரி செலுத்தும் கோடீஸ்வரர்கள்

அதேபோல, மேற்கூறிய நான்கு ஆண்டுகளில் ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் பெறுவதாகத் தெரிவித்த நபர்களின் எண்ணிக்கையும் 68 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 2014-15 வரி செலுத்தும் ஆண்டில் 48,416 ஆக இருந்த அவர்களின் எண்ணிக்கை 2017-18ஆம் வரி செலுத்தும் ஆண்டில் 81,344 ஆக உயர்ந்துள்ளது.

வரி ரிட்டன் தாக்கல் செய்வோர்

வரி ரிட்டன் தாக்கல் செய்வோர்


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவரான சுஷில் சந்திரா, கடந்த நான்கு ஆண்டுகளில் வரித் துறையின் பல்வேறு சீர்திருத்தங்கள் மற்றும் நடவடிக்கைகளால்தான் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டுகளில் வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கையும் 3.79 கோடியிலிருந்து 6.85 கோடியாக உயர்ந்துள்ளது என்றார்.

நேரடி வரி வசூல் ரூ.4.89 லட்சம் கோடி

நேரடி வரி வசூல் ரூ.4.89 லட்சம் கோடி

இதேபோல 2018-19 நிதியாண்டின் அக்டோபர் மூன்றாவது வாரம் வரையிலான வரி வருவாய் விவரங்களை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் அரசின் நேரடி வரி வசூல் ரூ.4.89 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது சென்ற நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வசூலான வரியைவிட 15.7 சதவிகிதம் அதிகமாகும்.

ரீபண்ட் தொகை ரூ.1.03 லட்சம் கோடி

ரீபண்ட் தொகை ரூ.1.03 லட்சம் கோடி


இந்த முழு நிதியாண்டில் மொத்தம் ரூ.11.5 லட்சம் கோடியை நேரடி வரி வாயிலாக வசூலிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அக்டோபர் மாத வரி வசூலுடன் இலக்கில் 42 சதவிகிதம் எட்டப்பட்டுள்ளது. இக்காலகட்டத்தில் ரீஃபண்ட் தொகையாக ரூ.1.09 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலம் வரையில் ரீஃபண்ட் வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட 62 சதவிகிதம் அதிகமாகும்.

 மத்திய நேரடி வரிகள் வாரியம்

மத்திய நேரடி வரிகள் வாரியம்

இந்த நிதியாண்டின் அக்டோபர் 21ஆம் தேதி வரையில் மொத்தம் 5.8 கோடி வருமான வரி ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டில் இது 3.6 கோடியாக இருந்தது. நடப்பு ஆண்டில் வருமான வரி வரம்புக்கள் புதிதாக 1.25 கோடி பேரை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

English summary
More than 140,000 taxpayers, including companies, declared income of more than Rupees 1 crore in their tax returns for 2016-17, a rise of over 60% from 2013-14.The number of salaried taxpayers rose 37% to 23.3 million in the three years ended 2016-17. In contrast, the number of non-salaried taxpayers went up by 19% to 23.3 million.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X