For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் வீழ்ச்சி..!

Google Oneindia Tamil News

மும்பை: மும்பை பங்குச் சந்தையில் இன்று நாளின் முடிவில் பெரும் சரிவு ஏற்பட்டது. சென்செக்ஸ் 505 புள்ளிகள் சரிந்தன.

மும்பை பங்குச் சந்தையில் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 37,585 ஆக இருந்தது. அதேபோல தேசிய பங்குச் சந்தையிலும் நிப்டி 137 புள்ளிகள் சரிந்து 11,377 ஆக இருந்தது.

Sensex dives in BSE

ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை குறைக்க அரசு வெளியிட்ட சில அறிவிப்புகளின் பின்னணியில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், ஆசிய பங்குச் சந்தையும் இன்று பலவீனமாகவே காணப்பட்டதும் சென்செக்ஸ் சரிவுக்கு இன்னொரு முக்கியக் காரணமாகும்.

இந்த சரிவு காரணமாக வங்கிச் சந்தை, நிதித்துறை சேவைப் பிரிவு, மின்சாரம், பார்மசூட்டிகல் ஆகிய துறைகளின் பங்குகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.

அதிகம் அடி வாங்கியவர்களின் வரிசையில் - ரிலையன்ஸ், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ், டாடா மோட்டார்ஸ், எச்டிஎப்சி, சன் பார்மா ஆகிய நிறுவனங்கள் முக்கியமானவை.

English summary
Sensex plunged over 500 Points in BSE todauy after Govt announced steps to lift the Rupee fall.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X